தித்திக்கும் தீந்தமிழ்
தித்திக்கும் தீந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
மரபுக் கவிதைகள் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கும் முன்னாள் அமைச்சர் கா. வேழவேந்தன், கட்டுரைகள் தீட்டுவதிலும் வல்லவர். தித்திக்கும் தீந்தமிழ் என்ற இந்த நூலில், எத்திக்கும் போற்றும் தித்திக்கும் தீந்தமிழ், திருக்குறள் ஏன் தேசிய இலக்கியம்? காந்தி அண்ணாவின் தமிழ்த் தொடர்புகள், அறிஞர் அண்ணாவின் உயர் தனிப்பண்புகள், டாக்டர் மு.வ. அவர்களின் தனிப்பெருமைகள், கலைஞரின் நகைச்சுவை தோரணங்கள், பாவேந்தர் விதைத்த புரட்சிக் கவிதைகள் உள்பட 24 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தமிழின் பெருமையையும், சிறப்புகளையும் பறைசாற்றுகின்றன. படிப்போரிடம் தமிழ் உணர்வை கிளர்ந்தெழச் செய்கின்றன. தன் ஆசிரியரான டாக்டர் மு. வரதராசனாரைப் பற்றிய கட்டுரையில், உள்ளத்தை நெகிழச் செய்கிறார், வேழவேந்தன். வரதராசனாரின் சிறப்புகளைக் கூறுவதுடன் அவருடைய படைப்புகளின் சாரத்தை அமுதம்போல் அள்ளித்தருகிறார். சுருக்கமாகச் சொன்னால், நெஞ்சை விட்டும், நினைவை விட்டும் அகலாத கட்டுரைகள். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.
—-
ஜாதகப்படி நீங்கள் என்ன தொழில் செய்யலாம்?, செந்தில் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ.
ஒவ்வொருவரும் அவரவர் ஜாதகப்படி என்ன தொழில செய்தால் வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறார் ஜோதிடர் பொன்னமராவதி பொன். கணேசன். புத்தகத்தின் விலை 30ரூ. இதே நூலாசிரியர் ஜோதிட அரிச்சுவடி என்ற நூலையும் எழுதியுள்ளார். விலை 20ரூ. நன்றி: தினத்தந்தி, 3/6/2015.