மனதின் குரல்

மனதின் குரல் (5 தொகுப்புகள்); பிரதமர் நரேந்திர மோடி, செந்தில் பதிப்பகம், பக். 1,664 (336+328+336+328+336), 5 தொகுப்புகள்: ரூ.2,000. விஜயதசமியன்று 2014 அக். 3-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடியின் “மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி ஒலிபரப்புத் தொடங்கியது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று வானொலியில் உரையாற்றும் நிகழ்ச்சியானது, 87-ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறது. இதில் 85 உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 5 தொகுப்புகளாக வெளிக்கொணர்ந்திருப்பது ஆவணப் பெட்டகமே. உரையாடலில் பல்வேறு, தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும் அதில் தமிழகத்தைப் பற்றியும், […]

Read more

மழைவில் மனிதர்கள்

மழைவில் மனிதர்கள், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், செந்தில் பதிப்பகம், பக்.240, விலை ரூ.200. சின்னஞ்சிறு வயது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டுகாலம், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசாத்தியமான நினைவாற்றலுடன் அழகுறப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். மனிதர்களோடும், பிராணிகளோடும், பறவைகளோடும், பூச்சிகளோடும், தூக்கத்தோடும், தும்மலோடும், குறட்டையோடும், கொட்டாவியோடும், சப்தத்தோடும், நிசப்தத்தோடும், ஒட்டடையோடும் பின்னிப்பிணைந்திருக்கின்றன இந்த அனுபவ வெளிப்பாடுகள். ஆடு மேய்க்கும் பாட்டி, “பூவுதான் ரெண்டு பூக்கும்; நாவு ரெண்டு பேசுமா?‘’ என்பதும், “திருமணங்களைப் பற்றித் தெரியாது; ஆனால், விடுமுறைகள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் அது’‘ என்று சிறுவயது […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. மரபுக் கவிதைகள் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கும் முன்னாள் அமைச்சர் கா. வேழவேந்தன், கட்டுரைகள் தீட்டுவதிலும் வல்லவர். தித்திக்கும் தீந்தமிழ் என்ற இந்த நூலில், எத்திக்கும் போற்றும் தித்திக்கும் தீந்தமிழ், திருக்குறள் ஏன் தேசிய இலக்கியம்? காந்தி அண்ணாவின் தமிழ்த் தொடர்புகள், அறிஞர் அண்ணாவின் உயர் தனிப்பண்புகள், டாக்டர் மு.வ. அவர்களின் தனிப்பெருமைகள், கலைஞரின் நகைச்சுவை தோரணங்கள், பாவேந்தர் விதைத்த புரட்சிக் கவிதைகள் உள்பட 24 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தமிழின் பெருமையையும், […]

Read more

கருத்து களஞ்சியம்

கருத்து களஞ்சியம், பேரா. அசோகா சுப்பிரமணியன், செந்தில் பதிப்பகம், பக். 168, விலை 160ரூ. மாணவர்களுக்கு முதன்முதலில் சத்துணவு வழங்கிய தலைவர் அபிப்ராய வீக்கம் எனும் சிந்தனையில், நம் மனதில் உயர்வாக விரிந்துள்ள தலைவர்களை பற்றி எவரேனும் விமர்சனம் செய்தால், விமர்சனங்களை புறந்தள்ளுவதும், கூறியவரை மறப்பதும் நம் இயல்பு. அவ்வாறு மறக்கப்பட்டவர்களுள் ஒருவர், சுதந்திர பித்தர், பாராட்டப் பெற்ற சிந்தனை சிற்பி, ம. சிங்காரவேலர். ரவுலட் சட்டம் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சைமன் குழு எதிர்ப்பு, கொடிநாள் போராட்டம் போன்றவை. சென்னையில் பிரபலமடைய காரணமானவர் […]

Read more