சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி
சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 500ரூ.
கே.டி.கே. தங்கமணியின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக இந்த வரலாற்று பெட்டக நூல் வெளிவந்துள்ளது. அவரது சட்டப் பேரவை உரைகளில் தெறிக்கிற மேதைமையும், வாதத்திறனும், சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து முன்வைக்கிற எளிய சொல் பயன்பாடும் பிரமிக்கத்தக்கதாய் இருக்கின்றன. கே.டி.கே. தங்கமணி பன்முகத் திறன் கொண்டவர். சட்டத்தை பெரிதும் மதிப்பவர். சிங்கப்பூரிலும் இலங்கையிலும் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். தோற்றத்தில் எளிமையானவர். தொழிலாளர்களுக்கா போராடுபவர். அவர் அறிவுஜீவயாகவும், அர்ப்பணிப்பு மிகுந்தவராகவும், வாதங்களில் வல்லுனராகவும் திகழ்ந்தார் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். கே.டி.கே.யின் சட்டமன்ற உரைகளை காலவரிசைப்படி தொகுத்து, ஒவ்வொரு உரைக்கும் பொருத்தமான தலைப்பைக் கொடுத்து, எந்த நாளில் எந்தத் தீர்மானத்தின் மீது கே.டி.கே. பேசினார் என்பதை அடிக்குறிப்பாகக் கொடுத்து இந்த நூலை தொகுத்திருக்கும் கவிஞர் கே. ஜீவபாரதியின் உழைப்பு பாராட்டுக்கு உரியது. நன்றி: தினத்தந்தி, 3/6/2015.
—-
மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு, இராமு நிலையம், சென்னை, விலை 180ரூ.
உலகில் சாமானியர்களாகப் பிறந்து சாதனையாளர்களாகத் திகழ்ந்த தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், தமிழ் அறிஞர்கள் 72 பேர்களின் இளமைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இந்த நூலில் எழுத்தாளர் தஞ்சை நா. எத்திராஜ் பதிவு செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.