மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு, தஞ்சை நா. எத்திராஜ், இராமு நிலையம், பக். 412, விலை 180ரூ. காந்தி, காமராஜர் போன்ற அரசியல் மேதைகள், பாரதியார், திரு.வி.க. உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், கரிகால் சோழன், சிவாஜி போன்ற நாடாண்டவர்கள், புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் என்று பலரின் இளமைக்கால வரலாறு மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: குமுதம்.

Read more

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. கே.டி.கே. தங்கமணியின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக இந்த வரலாற்று பெட்டக நூல் வெளிவந்துள்ளது. அவரது சட்டப் பேரவை உரைகளில் தெறிக்கிற மேதைமையும், வாதத்திறனும், சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து முன்வைக்கிற எளிய சொல் பயன்பாடும் பிரமிக்கத்தக்கதாய் இருக்கின்றன. கே.டி.கே. தங்கமணி பன்முகத் திறன் கொண்டவர். சட்டத்தை பெரிதும் மதிப்பவர். சிங்கப்பூரிலும் இலங்கையிலும் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். தோற்றத்தில் எளிமையானவர். தொழிலாளர்களுக்கா போராடுபவர். அவர் அறிவுஜீவயாகவும், அர்ப்பணிப்பு மிகுந்தவராகவும், வாதங்களில் வல்லுனராகவும் திகழ்ந்தார் என்பதை படம் […]

Read more