பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும்

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 328, விலை 245ரூ. இந்திய மாநிலங்கள், மக்கள் இறை நம்பிக்கை, வணங்கப்படும் தெய்வங்கள், விரதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், மாறுபட்ட வழிமுறைகள், மாநில வாரியாகக் கொண்டாடப்படும் விழாக்கள் அவற்றின் தாத்பரியங்களை அழகாக விளக்குகிறது இந்நூல். பொதுவாக காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை, அந்தந்த மாநிலங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களுக்கான புராண நிகழ்வுகளும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் மேவாரில் கொண்டாடப்படும் டீஜ் விழா, பார்வதி தேவிக்கானது. இதைத் திருமணமான பெண்கள் […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more