வீரமாமுனிவர்

வீரமாமுனிவர், அமுதன் அடிகள், தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனம், பக். 112, விலை ரூ.150. இத்தாலியில் உள்ள காஸ்ட்ரான் டெலி ஸ்ட்ரூவி என்ற ஊரில் 1680-இல் பிறந்த வீரமாமுனிவர், 1710-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்து தொண்டாற்றினார். அவரது தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டுகள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தாலியில் அவர் பிறந்த ஊரின் சிறப்பு, குடும்பத்தினர் விவரம், அங்கு அவர் ஆற்றிய சமயத் தொண்டு என்று இத்தாலிக்கே சென்ற நூலாசிரியர் தான் தேடி திரட்டிய தகவல்களை விரிவாக வெளியிட்டுள்ளார். பெஸ்கி குடும்பத்தைச் […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more