தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more

தி.க.சி. நேர்காணல்கள்

தி.க.சி. நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி-4, பக். 188, விலை 140ரூ. தி.க.சி.யின் 25 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு கால வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 75 ஆண்டு கால முற்போக்கு கலை, இலக்கிய வரலாற்றையும், விமர்சனப் போக்குகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. தி.க.சி.யின் விமர்சனங்கள், நேர்மையைப் பிரதிபலிப்பவையாக இருப்பவை. இத்தொகுப்பிலுள்ள நேர்காணல்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும், அவருடைய நேர்மைக்குச் சாட்சியமாக நிற்கின்றன. புதிய மனிதனுக்காக-புதிய வாழ்க்கைக்காக-புதிய கலாசாரத்துக்காக, கலை, இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த இலக்கியம் சமூக நலனுக்கும், […]

Read more

பெருந்திணைக்காரன்

பெருந்திணைக்காரன், கணேசகுமாரன், உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வளாகம், கருமண்டபம், திருச்சி 1, பக்கங்கள் 88, விலை 60ரூ. ஓர் இசைக் கருவிக்குள் வாயுவாகப் புகுந்து இசையாக வெளிப்படும் காற்றைப்போல… மனதின் இண்டு இடுக்குகளில் புகுந்து உணர்வுகளை மொழி வடிவில் வெளிக்கொண்டு வருகின்றன கணேசகுமாரனின் கதைகள். பெருந்திணைக்காரன் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 12 கதைகளும் அக மனதின் உணர்வுகளை நுட்பமாகப் பேசுபவை. இளம் வயதில் இருந்தே தனது ஆதர்ஷமாக இருந்து தன் ஆளுமையைத் தீர்மானித்த சித்தப்பா இறந்துவிட்டார். […]

Read more

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியடோர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-701-5.html   மௌனப்படம் தொடங்கி வண்ணப்படங்கள் வரையிலான தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சி இந்த நூலில் பதிவாகியுள்ளது. தமிழ்ச் சினிமா வரலாற்றின் அடிப்படை தகவல்களைத் தாண்டி சுதந்தர போராட்ட காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பங்களிப்பு மற்றும் எழுச்சி பெற்ற திராவிட இயக்க அரசியலின் பிரதான வெளிப்பாடாக சினிமா மாறியது போன்றவை குறித்தெல்லாம் ஆய்வு பூர்வமாகவும் […]

Read more