பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியடோர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-701-5.html
மௌனப்படம் தொடங்கி வண்ணப்படங்கள் வரையிலான தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சி இந்த நூலில் பதிவாகியுள்ளது. தமிழ்ச் சினிமா வரலாற்றின் அடிப்படை தகவல்களைத் தாண்டி சுதந்தர போராட்ட காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பங்களிப்பு மற்றும் எழுச்சி பெற்ற திராவிட இயக்க அரசியலின் பிரதான வெளிப்பாடாக சினிமா மாறியது போன்றவை குறித்தெல்லாம் ஆய்வு பூர்வமாகவும் இப்பத்தகம் அலசுகிறது. ஆங்கிலத்தில் த ஐஸ் ஆப் செர்பெண்ட் என்ற பெயரில் வெளிவந்து ஜனாதிபதி விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
—
எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை, ச. விசயலட்சுமி, உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி -1, விலை 60ரூ.
உரையாடலின் அந்தரங்க மொழியில் கவிதைகளை எழுதுபவர் ச. விசயலட்சுமி. வார்த்தைகளுக்குள் அடங்காத உணர்வுகளை கடல் முன் அதிசயித்து நிற்கும் பூனைப்போல இவர் கவிதைகளை சொல்கிறார். பக்குவப்படாமல் இருக்கும் மனதைப் பக்குவப்படுத்தும் ஒரு அறிதல் முறையாக கவிதையை பாவிப்பதாக கூறுகிறார் இவர். தேர்ந்த மொழியில் எழுதப்பட்ட நல்ல கவிதைகள் அடங்கிய தொகுப்பு நூல்.
முடியலத்துவம், செல்வேந்திரன், பட்டாம்பூச்சி பதிப்பகம், 28ஏ, கிருஷ்ணன் கோயில் தெரு, திருநகர், ஆழ்வார் திருநகர், சென்னை 87, விலை 50ரூ. To buy this book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-4.html
சமகால வாழ்க்கை குறித்த நுட்பமான கிண்டல்கள் சின்னச் சின்ன அவதானிப்புகள் உள்ள புதுக்கவிதைகள் பிரத்யேக அடையாளத்துடன் எழுதப்படுவது தமிழில் அரிது. தீவிரத்தன்மையின்றி எளிய வாசகர்களும் இனங்கண்டு கொள்ளும் புன்னகைக்க இயலும் கவிதைகளை முடியலத்துவம் என்னும் இத்தொகுதியில் அனாயசமாக சாதித்துள்ளார் செல்வேந்திரன். இதுபோன்ற கவிதைகள் தமிழுக்குத் தேவை. நன்றி: த சன்டே இந்தியன், 9 டிசம்பர் 2012.