ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், இனியன் சம்பத் பதிப்பகம், 4, பாரி தெரு, கலாசேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை -90, விலை 500ரூ. To buy this book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-0.html
திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர் ஈ.கே.வி. சம்பத். பெரியாரின் அண்ணன் மகனான இவர், பெரியார் மணியம்மை திருமணம் காரணமாக தி.மு.கழகம் பிளவுபட்டபோது அண்ணாவுடன் சென்றார். தி.மு.கழகத்தை அமைப்பதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.
சிறிது காலத்துக்குப் பின்னர் தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்பி, கண்ணதாசனுடன் காங்கிரசில் இணைந்தார். திராவிட இயக்கத்தில் இருந்தபோது சம்பத் ஆற்றிய பணிகளை விவேகானந்தன் இனியன் சம்பத், கல்பனாதாசன் ஆகியோர் விளக்கமாகவும், அழகாகவும் இந்நூலில் எழுதியுள்ளார். 604 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தோடு ஈ.வெ.கி. சம்பத் எழுதிய கட்சி பிறந்தது, தமிழ்த் தேசியக் கட்சியின் கொள்கை முழக்கம், நான் கண்ட சோவியத் யூனியன், நபிகள் நாயகம், முடிசாந்தது(பிரெஞ்சு புரட்சி) தமிழ்த் தேசியக் கட்சியின் கொள்கைத் திட்ட அறிக்கை ஆகிய சிறு புத்தகங்கள் ஒரே புத்தகமாக அச்சிடப்பட்டு ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் புத்தகத்துடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல சம்பத் ஆற்றிய சொற்பொழிவுகள், சம்பத் பற்றி மற்ற தலைவர்கள் சூட்டிய புகழாரம் ஆகியவை கொண்ட 4.30 மணி நேரம் ஓடக்கூடிய சி.டி.யும் (எம்.பி.3) இந்தப் புத்தகங்களுடன் இலவம். அதாவது 2 புத்தகங்களுடன் ஒரு சி.டி.யும் சேர்த்து விலை 500ரூ.
—–
வழி விடுங்கள், சி. தனவேல், ஐ.ஏ.எஸ். கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, விலை 40ரூ.
சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் வழிவிடுங்கள் என்ற நூலை ஐ.ஏ,எஸ். அதிகாரி கி. தனவேல் எழுதியுள்ளார். புதுக்கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட இந்த கவிதை தொகுப்பில் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும், அதை படைத்தவருக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காணமுடிகிறது. குறிப்பாக சாமிப்பாம்பு என்ற கவிதை மூலம் மூடநம்பிக்கையை சாடுகிறார். இயற்கையை அழித்து உன்னை நீயே தோற்கடிப்பதை உணர்ந்துகொள் என்ற வரிகள் இந்த கவிதை தொகுப்புக்கு அழகு சேர்க்கிறது. பொருள் பொதிந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அனைவருக்கும் பயனுள்ள வகையில் கவிதைகளை உருவாக்கி உள்ள நூல் ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 13 பிப்ரவரி 2013.