என் பள்ளி

என் பள்ளி, கல்யாண்குமார், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை 90ரூ.

வெற்றி கண்ட பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதில் பொதுவாக எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பள்ளியில் படிக்கும்போது பிரபலங்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும். வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., டைரக்டர் நடிகர் மணிவண்ணன், மதன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, கார்த்தி சிதம்பரம், தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் மணியம் செல்வன், இயக்குனர் பாண்டியராஜ் முதலிய பிரமுகர்களின் பள்ளிக்கூட அனுபவங்கள், சிறு சிறு கட்டுரைகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

_____

வானவில், ஆர். மணவாளவன், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், லாஸ்பேட்டை மெயின்ரோடு, பாக்குமடையான்பட்டு, புதுச்சேரி – 605008, விலை 100ரூ.

பெரும்பாலானவர்கள் அறிந்திடாத பல அரிய செய்திகளை கட்டுரைகள் மூலமாக தந்திருக்கிறார் ஆசிரியர்.  கோயில்கள் தோன்றியவிதம், சித்தர்களை பற்றிய தகவல்கள், அறிவியல் நிகழ்வுகள், கலைத்துறையில் பெண்களின் ஆதிக்கம் ஆகியவற்றுடன் குழந்தைகளுக்கான தகவல்கள், வாலிபர்களுக்கான காதல் தகவல்கள், விஞ்ஞானத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கான செய்திகள், டைனோசர் இனம் தமிழத்தில் வாழ்ந்ததா? என்பதற்கான ஆய்வுகள் போன்ற கட்டுரைகளின் தொகுப்பு அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 27 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *