துப்புக்காரி

தூப்புக்காரி, மலர்வதி, வெளியீடு: அனல் வெளியீடு, தண்ணீர் பந்தல், பாலூர், கருங்கல், குமரி மாவட்டம், பக்: 136, விலை ரூ. 75/- To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-9.html

ஒரு விளிம்பு நிலைப் பெண்ணின் அடையாளம்தான் தூப்புக்காரி. மருத்துவ மனைகளில் துப்புரவு செய்யும், ஒரு தாயின் வாழ்வை மகள், மகளின் மகள் என்று அடுத்தடுத்த தலைமுறையின் சாபமாக வாழ்க்கை போவதை சாடிப் போகும் நாவல். பணம் தொலைவதில் உள்ள படபடப்பை தன்னைத் தொலைப்பதில் அவள் காட்டவில்லை. அவளது மகளும் எச்சிலைக் குறீயிடுடாய் காதலில் சோரம் போகும் எச்சிலாகி நிற்கிறாள். இதில்லாம் வழக்கமான நிகழ்வுகள்தான். ஆனால் அதன் ஊடாக நம் கண்ணுக்கு அதுவரை புலப்படாத அழுக்குகளை அவர்கள் அள்ளுவதும், குடலைப் புரட்டும் மலத்தையும், தீட்டுரத்தைதயும் அது ஏற்படுத்தும் அருவருப்பையும் முகம் சுழிக்காமல் துப்புரவு செய்து இந்த பூமியை அழகாக்கும் அந்த மாந்தர்களைப் படைக்க எவருக்கும் ஒரு துணிச்சல் வேண்டும். மலர்வதிக்கு அந்தத் துணிச்சல் உண்டு. இது ஒரு தலித்திய வழ்க்கை மட்டுமல்ல. அதன் பின் தொடரும் ரணத்தையும், சாதியக் கொடுமையையும் புகட்டும் நாவல். நன்றி: குமுதம், 13.3.2013.

இடிந்தக்கரை, குட்டிரேவதி, வெளியீடு: ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை, பக்: 64, விலை: ரூ. 50. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-0.html

கரையில் நின்று கடலை அளக்கும் பெண்ணின் பார்வை தூரத்தை இடிந்தக்கரை கவிதைகளில் அளக்க முடிகிறது. துக்கம், சோகம், இயலாமை, காதல், கடல், மீன், கவிச்சி எல்லாமே தனக்கான உலகில் உண்டு என பேசும் உரிமைகுரல் இது. கடலின் நீள அகலத்தை விட, அதன் ஆழம்தான் குட்டி ரேவதியின் கவிதைகளின் மொழியாய் வந்து நம் காதில் அலை அடிக்கிறது. கடல் உரிமைக்காகப் போராடும் இடிந்தகரைப் பெண்களுக்கு மட்டுமல்ல, காலத்தின் சுழலில் தொலையாத மானுடம் பேசும் கடலோரப் பெண் பறவைகள் எல்லோருக்கும் காட்சிப் படுத்த வேண்டிய கவிதைகள் இவை. “இப்போதெல்லாம் மரணத்தைத் தள்ளி வைக்கப் பழகிக் கொண்டோம்” இதுதான் பெண்மையின் பலம். குட்டி ரேவதியின் பலமும் கூட. நன்றி: குமுதம் , 13.3.2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *