திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள், தேவகாந்தன், ஆதி பதிப்பகம், விலை: ரூ.120. புலம்பெயர்ந்து, தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளரும் இதழாளருமான தேவகாந்தனின் ஈழத்து நினைவுகளின் சில பக்கங்கள் நூலாகியிருக்கின்றன. பெரிதும், பிள்ளைப் பிராயத்து நினைவுகள். புழுதியைக் கிளப்பியபடி நாளைக்கு மூன்று முறை கிராமத்துக்கு வந்து செல்லும் பேருந்து, பலிக்காமல் போன ஆரூடங்கள், நெஞ்சின் ஆழத்தில் பதிந்துவிட்ட நம்பிக்கைகள், யூரியாவின் வருகைக்கு முன்பிருந்த எரு பயன்பாடு, மிக அரிதாய் ஒரு வீட்டில் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியின் வர்த்தக சேவை, ‘ஓ… ரசிக்கும்சீ.. மானேவா…’ என்று சொல் பிரிந்து […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள் ,  தேவகாந்தன், ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த நூலாசிரியர்,1984முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது கனடா நாட்டில் வாழ்கிறார். என்றாலும் தான் பிறந்த மண்ணோடான அவருடைய அனுபவங்களை அவரால் மறக்க முடியவில்லை.அந்த நினைவுகளை இந்நூலில் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும் கிடுகு வேலி கலாசாரத்துடன் தொடங்குகிறது நூல்.இந்தக் கிடுகுவேலிகள் மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுப்பவையாக இருந்திருக்கின்றன. குறுகியமணல் பாதைகளின் திருப்பத்தில் செல்லும் வண்டிகள் கிடுகு வேலிகளில் மோதி, வேலி சேதமடையாமல் இருப்பதற்காக வேலியின் மூலையில் […]

Read more

சா

சா, கு.ஜெயபிரகாஷ், ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.120. சாவை அழைத்துவரும் மலர் நம்பிக்கையாக இருந்த ஒருவன் இறந்துவிட, அவனைச் சார்ந்தோர் அந்த இழப்பைக் குறித்து மனம் தளர்ந்து இரங்கலாகப் பாடுவது ‘கையறுநிலை’. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட இலக்கண நூல்கள் இது குறித்துப் பேசியுள்ளன. தமிழ்க் கவிதை வரலாற்றில், சக மனிதர்களின் இழப்பின் துயரத்தை வெளிப்படுத்தும் கையறுநிலைப் பாடல்களுக்கு எப்போதும் ஒரு மதிப்புமிக்க இடம் உண்டு. பெரும்பாலும் போரில் இறந்துபோன மன்னர்கள் குறித்தோ, வீரர்கள் குறித்தோதான் இவ்வகைப் பாடல்கள் அதிகமும் பாடப்பட்டன. கு.ஜெயபிரகாஷ் […]

Read more

சா

சா,  கு. ஜெயபிரகாஷ்,  ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120.  மரணத்தை எண்ணத்தில் கொண்டு எழுத்தாக மாற்றுவதைப் பெரும்பாலும் யாரும்விரும்புவதில்லை அல்லது முன் வருவதில்லை.தமிழில் மரணம் தொடர்பாக வெளிவந்த நூல்களை, புதினங்களை விரல்விட்டு அவலம் சம்பத்தின் “இடைவெளி’யையும் சேர்த்து. இத்தனைக்கும் சித்தர்கள் வாழ்ந்த நிலம் இது. இங்கே மரணத்தைப் பாடாத சித்தர்களே இல்லை. பழந்தமிழ்க் கவிஞர்கள் பாடிய தனிப் பாடல்கள் ஏராளம். ஆங்கிலத்தில் நிறைய நூல்கள். தமிழில் பதிவுகள் குறைவே.கு. ஜெயபிரகாஷ் எழுதிய ‘சா’ நாவல் (ஓரிடத்தில் நூல் என்றும் எச்சரிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) இந்தப் […]

Read more

சுளுந்தீ

சுளுந்தீ, இரா.முத்துநாகு, ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.450 நெருப்பும், சக்கரமும் மனித குல நாகரிக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளிகள். நெருப்பைப் பூவுலகுக்குத் திருடிக்கொண்டு வந்துசேர்த்த பிரமிதியாக்கைக் கடவுளாகக் கொண்டாடியது கிரேக்க மரபு. கைக்குள் அடங்கும் தீப்பெட்டியிலிருந்து அது புறப்பட்டு, பிறகு ஒளிரும் மின்சாரமாகப் பரவிவிட்ட பின்னர், இன்றைய சூழலில் நெருப்பு பிரமிக்கத்தக்க வஸ்து அல்ல. ஒருகாலத்தில் எண்ணெய்த் துணி கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டி, வெளிச்சம் கொடுத்தது. தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்னரே ‘சுளுந்து’ என்ற மரம் வெளிச்சம் தந்துள்ளது. சுடரும் நெருப்பான சுளுந்தீயைக் கொண்டு […]

Read more

கோடையில் ஒரு மழை

கோடையில் ஒரு மழை, ச. ஆறுமுகம், ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 152, விலை 120ரூ. மருந்து கொடுக்காமல் பல்லை பிடுங்கி பழிதீர்க்கும் பல் மருத்துவர் கொரியன், சீனம், பிரித்தானியா, இலத்தீன் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ள தொகுதி. இதில் மலை மேல் வந்தது கரடி என்ற கதைதான். தொகுதியில் உள்ள கதைகளிலேயே சிறந்த கதை. ஆலிவ் மன்றோ (கனடா) எழுதிய கதை. ஞாபக மறதி நோயில், தன் கணவனையே மறந்துவிடும், வயது மனைவியின் நலத்திற்காக, எதையும் செய்ய […]

Read more

கடவுளின் கைபேசி எண்

கடவுளின் கைபேசி எண், இ.சு. முரளிதரன், ஜீவநதி பப்ளிகேஷன்ஸ், பக். 76, விலை 200ரூ. ஈழத்துக் கவிஞர் இ.சு. முரளிதரனின் இச்சிறுகதைத் தொகுப்பு, ஈழத்து சிறுகதையின் போக்கு உலகச் சிறுகதைப் போக்குடன் இயைந்துபோகிறது என்பதற்கு உதாரணம். தொண்ணூறுகளுக்குப் பிறகான பின் நவீனத்துவப் பாணியிலான சிறுகதை வளர்ச்சிக்கு ஈழத்து அரசியல் சூழலும் பேரினவாத ஒடுக்குமுறையின் கொடூரமான நிலைமையுமே காரணம் என்பதற்கான சான்றாக கடவுளிக் கைபேசி எண் தொகுப்பு அமைந்துள்ளது. பாடக்குறிப்பு, பாராட்டுச் சான்றிதழ், கைபேசி உரையாடல், AB+ குருதியும் நீலநரியும் ஆழ்ந்த அர்த்தம் தருபவை. ஈழத்தின் […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 160, விலை 170ரூ. மூலப் பொருட்களை அப்படியே வணிகம் செய்யாமல் யாரெல்லாம் மதிப்புக் கூட்டி வணிகம் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் பொருளாதார ரீதியில் சிறப்பாக உயர்ந்து வருகிறார்கள். அதற்கு உதாரணம் ஜப்பான். ஆனால் அனைத்து மூலப்பொருட்களும் நிறைந்து விளங்கும் நமது நாட்டில் மதிப்புக் கூட்டி வணிகம் செய்வதின் மகத்துவத்தை உணராதவர்களாக நாம் இருந்து வருகிறோம். அந்தக் குறையைப் போக்க மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன என்பதை எளிமையாக […]

Read more

இடிந்த கரை

இடிந்த கரை, குட்டி ரேவதி, ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-0.html  இது ஒரு கவிதை நூல். புத்தகம் முழுவதும் இடம்பெற்றுள்ள கவிதைகள் கடல் மற்றும் பெண்கள் பற்றி புனையப்பட்டுள்ளது. எளிய நடையில் உவமைகளோடு கவிதைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 14/8/2013   —-   முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, […]

Read more
1 2