இடிந்த கரை
இடிந்த கரை, குட்டி ரேவதி, ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-0.html
இது ஒரு கவிதை நூல். புத்தகம் முழுவதும் இடம்பெற்றுள்ள கவிதைகள் கடல் மற்றும் பெண்கள் பற்றி புனையப்பட்டுள்ளது. எளிய நடையில் உவமைகளோடு கவிதைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 14/8/2013
—-
முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, லாயிட்ஸ் 2 லேன், அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 151, விலை 150ரூ.
பொதுவாக எல்லோருக்குமே தங்கள் முடியைப் பாதுகாக்க வேண்டம் என்ற எண்ணம் இருக்கும். அதேபோல்தான் சருமத்தில் பிரச்னை வராமல் காப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் எழும். இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் விஞ்ஞான ரீதியான காரணங்களை எடுத்துச் சொல்லி அவற்றை பாதுகாக்கும் எளிய வழிகளையும் இந்நூலில் சொல்லித் தருகிறார் டாக்டர் ஞானசம்பந்தம். எதற்கும் தீர்வுகாண முடியும் என்பதுதான் ஹோமியோபதி மருத்தவத்தின் தனிச்சிறப்பு என்பதை கட்டுரைகள் வாயிலாக பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். மருத்துவ நூல் என்றாலும் அவர் கையாண்டிருக்கும் எளிய தமிழ் நடை நூலை படிக்கத் தூண்டுகிறது. நன்றி: குமுதம், 11/9/2013.
—-
பசும்பொன் 24 காரட், கவிமுரசு கந்தசாமி, கவிமுரசு புத்தகப் பூங்கா, 94, கீழ ரத வீதி, சிவகாசி, விலை 70ரூ.
தங்கமே மீண்டும்/தரணி போற்றப் பிறந்து வா/தாலாட்ட வைத்திருக்கிறோம்/தங்கத் தொட்டில் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பத்தரை மாற்றுத் தங்கமாக 24 காரட் தங்கமாக மின்ன வைக்கிறார் நூலாசிரியர். முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகப் பணி, அரசியல் பணி, தொழிற்சங்க பணி, இலக்கியப் பணி, பொதுப்பணி, மக்களுக்காக அவர் செய்த புரட்சி என்று அவரது வரலாற்றை மிகச் சுருக்கமாக அதேசமயம் படித்தவுடன் முழு வரலாற்றையும் உணர்ந்து கொள்ளும் விதமாக, கவிதை நடையில் படைத்திருக்கிறார். சேரநாடு வேழ முடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டிய நாடும் பசும்பொன்னும் முத்துடைத்து வரிகள் நூலுக்கு மகுடம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/9/2013.