ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்
ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், பேட்ரிஷியா பப்ளிகேஷன், 2/40பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ.
ராஜீவ்காந்தி படுகொலை பின்னணியில் தனக்கு தெரிந்த விஷயங்களை வெளியிட்டு உள்ளார், திருச்சி வேலுசாமி. திடுக்கிடும் தகவல்கள் பல இடம்பெற்று இருக்கின்றன. ராஜீவ் கொலை, தொடர்பாக அவர் எழுப்பிய வினாக்கள் இன்னும் விடைகாண முடியாமலே இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது. அத்துடன் அன்பு கணவரை பறிகொடுத்த சோனியாகாந்தி, பாசத் தந்தையை இழந்த பிரியங்கா காந்தி ஆகியோர் வேதனைகளின் மவுன வெளிப்பாடுகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/8/2013
—-
தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சி.சி.இ), ஓர் அறிமுகம், வேதா ஸ்ரீதரன், வேதப்ரகாசனம், 142, கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை 28, விலை – தலா ரூபாய் 250.
இதுவரை இருந்த பாடங்களை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதும் பள்ளிக் கல்வி முழுமையாக மாற்றி, மாணவர்களின்திறமை மதிப்பீடு செய்யும் கல்வி முறையை (சி.சி.இ.) தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு மாணவனின் திறமையை எப்படி வெளிக்கொணர்வது அல்லது அவனை எப்படி திறமை உள்ளவனாக உருவாக்குவது? திறமையின் அடிப்படையில் எப்படி மதிப்பீடு வழங்குவது என்பது போன்றவற்றுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டி நூல்களாக இந்நூலாசிரியர், இரு நூல்களை உருவாக்கியுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, இப்புதிய (சி.சி.இ.)முறை கொஞ்சம் கடினமாகவும், புரியாததாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அதை இவ்விரு நூல்களும் எளிதாக்குகின்றன. இந்தப் புதிய மதிப்பீட்டு முறைக் கல்வி, ஒரு மாணவனை எவ்வாறு மேம்படுத்துவது என்று தொடங்கி, அவனுக்கான பாடங்கள், பாடங்கள் சார்ந்த மற்ற விஷயங்கள், உடற்கல்வி, பொதுஅறிவு, மாணவனின் தேர்ச்சியை மதிப்பீடு செய்யும் முறை, இதன் சிறப்பு குறித்த சில கல்வியாளர்களின் கருத்துக்கள், பல நுட்பமான டெக்னிக்கல் விஷயங்கள் என்று பல விவரக்ஙளை இந்நூல்கள் விளக்குகின்றன. இடையிடையே குட்டிக் கதைகள், துணுக்குச் செய்திகள், அன்றாட நடைமுறைகள், அதற்கான தீர்வுகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் செயல்முறைப் பயிற்சிகளைப் போதிக்கும் இரு சி.டி.களும் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது சிறப்பானது. ஆசிரியர்களை நல்லாசிரியர்களாக உயர்த்தும் வழிகாட்டி நூல்களாக இவை அமைந்துள்ளன. -பரக்கத். நன்றி: துக்ளக், 25/9/2013. ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்