வனசாட்சி
வனசாட்சி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-7.html
கண்ணீர்த்தோட்டம் வறுமையில் இருந்த மக்களை வளமான வாழ்வு என்று ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களில் சிதைத்ததை விளக்கிய டேனியலின் எரியும் பனிக்காடு நாவலைப் போன்று தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குச் சென்று உழன்ற மக்களின் சுமார் 200 ஆண்டு கதையைச் சொல்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் வனசாட்சி. வடஇலங்கையில் கரையிறங்கி வழியெங்கும் அவஸ்தைகளை அனுபவித்து, குற்றுயிராக முன்பின் அறிமுகமே இல்லாத ஹட்டன் தோட்டத்தைக் கால்நடையாக அடைகிறார்கள் தமிழர்கள். அங்கே லைன் வீடுகள் எனப்படும் வீடுகள், தேயிலைத் தோட்டத்து வாழ்க்கை. தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வுக்கும் பின்னர் சாஸ்திரி -பண்டாரநாயகா ஒப்பந்தம் மூலமாக இடையூறு வருகிறது. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இருந்து தமிழகத்தின் நீலகிரித் தேயிலைத் தோட்டங்களுக்கு அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இடம் மட்டும்தான் மாறுதல், மற்றபடி எல்லாம் ஒன்றுதான். இலங்கையின் அரசியல், போராட்ட பின்னணியில் வரலாற்றைத் தொகுத்துக் கதை சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர் தமிழ்மகன். தேயிலைத் தோட்டத்திலிருந்து ஓடிவந்து புலிகள் இயக்கத்தில் சேரும் லட்சுமியின் கதைபோல் பல பாத்திரங்களின் கதைகள் நாவல் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக விரவிக் கிடக்கின்றன.
—-
மொழிப்போர் வரலாறு, ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், ரத்னா பவன் ஹோட்டல் எதிரே, தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-961-3.html
இங்கிலாந்து நாட்டுக்கு எதிரான விடுதலைப்போராட்டம், மொழிக்காக நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டம் என்று தமிழ்மக்கள் கடந்த நூற்றாண்டில் கண்ட போராட்டங்களைச் சொல்லும் எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் இம்மூன்றில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி எழுதிய நூல் இது. காந்தியின் காலத்திலிருந்து இந்தி பிரச்சாரம் தொடங்கியதைச் சொல்லும் இந்நூல் பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை விளக்குகிறது. ஆரம்ப கட்டத்தில் சத்தியமூர்த்தியும் ராஜாஜியும் இந்திக்கு ஆதரவாக இருந்தனர். 1938ல் திருச்சி உறையூரில் இருந்து சென்னைக்கு 41 நாட்கள் நடந்து இந்தி எதிர்ப்புப் படையொன்று வந்து சேர்ந்தது. வழியில் அவர்கள் பாடிய பாரதிதாசன் எழுதிய பாடலில் இருந்த வரிகளில் ஒன்றுதான் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்பது, நடராசனும் தாளமுத்துவும் இதில் களப்பலிகள் ஆனார்கள் என்பதையும் அக்காலகட்டத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோஷத்தை கல்கி எலிவளை எலிகளுக்கே என்று கிண்டல் செய்ததையும் இந்நூலில் காணமுடிகிறது. நன்றி: அந்திமழை, 30/9/2013.

