மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 96, விலை 85ரூ. மெட்ராஸ்காரர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடிகளை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த, 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கின்றனர்’ என, சித்திரை வெயிலாய் வறுத்தெடுக்கிறார், சென்னைவாசியான தமிழ்மகன். தமிழன் பெயரோடு, ‘துரை’ சேர்ந்த வரலாற்றிற்கு, வள்ளிமலை சுவாமிகளே காரணமாம். ஆம்… ஆங்கில புத்தாண்டில், […]

Read more

தாரகை

தாரகை, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. இந்நூல் சினிமா உலகத்தை கழுகுப் பார்வையில் பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் தமிழ் மகன். ஒரு தேர்ந்த வில் வித்தைக்காரனின் அம்புகளைப்போல இவரது சொற்களும், சொற்களின் வழி விரிந்து செல்லும் கதை உலகமும் இந்த யதார்த்தத்துக்கு துணை புரிகின்றன. தீபிகா என்ற நடிகை, திடீர் புகழ் பெற்று சிலரை […]

Read more

செல்லுலாயிட் சித்திரங்கள்

செல்லுலாயிட் சித்திரங்கள், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 207, விலை 100ரூ. சிவாஜிக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பத்தாண்டு காலத்தில், ஆயிரம் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறார் தமிழ்மகன். அடுத்த எட்டு ஆண்டுகளில் இருபதுக்கும் குறைவாம். இரண்டும் கடந்த சமஸ்திதியில் வெளிவந்திருக்கிறது அவருடைய இந்த நூல். சின்னச் சின்னக் கட்டுரைகள் சிறுகதை போன்ற முத்தாய்ப்போடு. உருக்கம் அல்லது கிறக்கம் தரும் தகவல்கள், பனி மூட்டம் போன்ற மனித நேயங்கள், விடையில்லாத கேள்விகள், கிளாமரில் துவங்கி மதமாற்றம் வரை போன நடிகையர் என்று சினிமா வேகத்தில் நிறைய […]

Read more

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010)

தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010), தமிழ்மகன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 120ரூ. சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வானவில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம். பாரதியார், வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. சிறுகதையின் சாரத்தையும் விளக்கி, அதன் சிறப்பையும் சொல்லிச் செல்கிறார் […]

Read more

வனசாட்சி

வனசாட்சி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-7.html கண்ணீர்த்தோட்டம் வறுமையில் இருந்த மக்களை வளமான வாழ்வு என்று ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களில் சிதைத்ததை விளக்கிய டேனியலின் எரியும் பனிக்காடு நாவலைப் போன்று தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குச் சென்று உழன்ற மக்களின் சுமார் 200 ஆண்டு கதையைச் சொல்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் வனசாட்சி. வடஇலங்கையில் கரையிறங்கி வழியெங்கும் அவஸ்தைகளை அனுபவித்து, குற்றுயிராக முன்பின் அறிமுகமே இல்லாத ஹட்டன் […]

Read more

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு

மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையோடு, டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை- 17; விலை; ரூ.100. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-6.html மார்பக வளர்ச்சி, புற்றுநோய் எதனால் வருகிறது. அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாக தரப்பட்டுள்ளது. புற்று நோய் சிகிச்சை மேற்கொண்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை, பிற சிகிச்சை முறைகள் என நிறைய விவரங்கள் உள்ளன. பெண்கள் […]

Read more