முதலாம் இராசராச சோழன்
முதலாம் இராசராச சோழன், ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 135ரூ. தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட இராசராச சோழன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி பெரும் புகழ்பெற்றவர். அவர் வரலாற்றை கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், மெய்க்கீர்த்திகளையும் ஆதாரமாகக் கொண்டு, விரிவாக எழுதியுள்ளார். நூலாசிரியர் கே.டி. திருநாவுக்கரசு. இராசராசனின் அண்ணனும், பட்டத்து இளவரசனுமான ஆதித்தகரிகாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான் என்பது சோழர் காலத்து மிக முக்கிய நிகழ்ச்சி. இதுபற்றி ஆசிரியர் விரிவாகவும், சுவைபடவும் குறிப்பிட்டுள்ளார். […]
Read more