திருப்பட்டூர் அற்புதங்கள்
திருப்பட்டூர் அற்புதங்கள்,வி. ராம்ஜி, விகடன் பிரசுரம், விலை 95ரூ.
To buy this tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-7.html
திருப்பட்டூர் வரும் அடியவர்களுக்கு வாழ்க்கை வசதிசெய்து தருவதை சிறப்பாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு தத்துவ விஷயத்தை எளிதாக விளக்க, ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பிரம்மாவில் ஆரம்பித்து வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்று பலரும் திருப்பட்டூர் வந்ததையும், அவர்கள் பெற்ற அனுபவத்தையும் மிக நேர்த்தியான நெசவாக பின்னப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கு இத்தனைப் பெரிய உருவமா, முழுவதும் மஞ்சளா? என்று பிரம்மாவை வணங்குவதை சுவைபட விவரிக்கிறது இந்நூல். படைப்புத் தொழிலை மறுபடி செய்ய விதி இருப்பின் விதி கூட்டி அருளுக என்று சிவபெருமான் பிரம்மாவுக்கு உத்தரவிடுகிறார். பிரம்மாவும் அங்கு அமர்ந்தபடி, யாரெல்லாம் தரிசிக்க வந்தார்களோ அவர்களின் விதியை மாற்றி, நல்லன பக்கம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். இந்த விஷயம் படிக்கிறவர் இடையே பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. – பாலகுமாரன்.
—-
பொதுத்தமிழ், விகடன் பிரசுரம், விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-8.html போட்டித் தேர்வுகளில் சாதனை படைப்பது சாத்தியமே… இந்தப் புத்தகம் உங்களிடத்தில் இருந்தால். பாடத்திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்ட துல்லியப் பதிவு. நன்றி – ஆனந்தவிகடன், 0 7 நவம்பர், 2012.