செள்ளு

செள்ளு,செல்வராஜ், பாரதி புத்தகாலயம்.(சிறந்த சிறுகதைத்தொகுப்பு). தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத கடலோர மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை, அதன் அசலான மொழியில் முன்வைக்கிறார் செல்வராஜ். கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமமான சைமன் காலனியில் பிறந்த இவர், பாரம்பரிய மீன்பிடிச் சமூகமான முக்குவர்களின் வாழ்வையும், அவர்களின் பாடுகளையும் மிகவும் நெருக்கமாக, உள்ளிருந்து பேசுகிறார். தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புத்தம் புதியதான இந்த மொழி, உள்ளே நுழையும்போது சற்றே மிரளவைக்கலாம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, 1990களில் வீச்சுடன் வெளிப்பட்ட தலித் இலக்கிய எழுத்துகளை உள்வாங்க, அப்போது வாசக மனம் […]

Read more

எழுதித் திரிந்த காலம்

எழுதித் திரிந்த காலம், புதுவை ரா. ரஜினி, புதுவை ரா.ராஜினி, புதுச்சேரி, பக். 128, விலை 150ரூ. பல்வேறு இதழ்களில் எழுதிய 22 கட்டுரைகள், நூலாசிரியரின் 2 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு இந்நூலில் சுவையாகப் பரிமாறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் இந்தக் கட்டுரைகளில் பதிவாகியிருக்கிறன்றன. எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் இருந்திருக்கும் என்றாலும், இக்கட்டுரைகளைப் படிக்கும்போது இனம்புரியாத வாசிப்பின்பம் ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மை. எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் நூலாசிரியர் பழகிய அனுபவம் சல்யூட் என்ற கட்டுரையில் நமது […]

Read more

செள்ளு

செள்ளு, செல்வராஜ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 96, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-7.html கடல் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்குக்கூட கடலோர மக்களின் வாழ்வு பற்றி தெரிவதில்லை. இந்த நிலையில், கடலோர மக்களின் வாழ்வைத் தழுவி நெய்தல் நிலத்து இலக்கியமாக வந்திருப்பதுதான் செல்வராஜின் செள்ளு சிறுகதைத் தொகுப்பு. தென்தமிழகத்தில் குமரி மாவட்டத்தின் அரபிக் கடலோரத்தில் வாழும் பாரம்பரிய மீனவச் சமூகமாக முக்குவர்களின் வாழ்வை, அவர்களின் காதலை, துன்பத்தை, நொய்மையை, தேடலை, […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ. வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் […]

Read more