எழுதித் திரிந்த காலம்
எழுதித் திரிந்த காலம், புதுவை ரா. ரஜினி, புதுவை ரா.ராஜினி, புதுச்சேரி, பக். 128, விலை 150ரூ.
பல்வேறு இதழ்களில் எழுதிய 22 கட்டுரைகள், நூலாசிரியரின் 2 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு இந்நூலில் சுவையாகப் பரிமாறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் இந்தக் கட்டுரைகளில் பதிவாகியிருக்கிறன்றன. எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் இருந்திருக்கும் என்றாலும், இக்கட்டுரைகளைப் படிக்கும்போது இனம்புரியாத வாசிப்பின்பம் ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மை. எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் நூலாசிரியர் பழகிய அனுபவம் சல்யூட் என்ற கட்டுரையில் நமது கண்மன் விரிந்து சுகானுபவமாய் நெஞ்சில் நிறைகிறது. பேசிக் கொண்டிருப்பதில் அவருக்கு (கி.ரா.வுக்கு) கொள்ளையின்பம். இடையே வந்துவிழும் பழமொழிகளும், நகைச்சுவை செய்திகளும், தான் கண்ட மனிதர்களின் விவரங்களும், செவி வழித் தகவல்களும் சேர்த்துச் சேர்த்து உரையாடல்களை சுவாரஸ்யமாக்கி நகர்த்துவார் என்று அவர் குறிப்பிட்டிருப்பதை கி.ரா.வுடன் பழகிய அனைவரும் ஏற்றுக் கொள்வர். சிறுவயதில் ஒவ்வொருவரும் கண்ட கனவு, நனவாகாமல் வெறும் கனவாகவே போய்விட்டிருக்கும். அதை வாத்தியார் ஆக நினைத்த நான் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளனாகினேன். அரசாங்க வேலையே வேண்டாமென்ற நண்பன் தாசில்தாராய் இருக்கிறான். அந்த எஸ்.பி.பி., டிராபிக் போலீஸாய் கை, காலை ஆட்டிக் கொண்டு ஆடோமேடிக் சப்பாத்தி போடும் பிளேட் விற்க, என் வீட்டு வாசலுக்கே வந்தான் என்று குறிப்பிடும்போது, ஒரு சோகம் நம் மனதைச் சூழ்ந்து கொள்கிறது. எளிய, இனிய கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினமணி,20/10/2013.
—-
செள்ளு, செல்வராஜ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-7.html
6 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கதைகள் அனைத்தும் கடலோத மக்களைப் பற்றிய நெஞ்சைத் தொடும் கதைகள். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013. எழுதித் திரிந்த காலம்
