வந்தேறிகள்

வந்தேறிகள், இரா. பாரதிநாதன், மதி நிலையம், பக். 376, விலை 325ரூ. நூற்றாண்டு கடந்தாலும் தொடரும் சமூக வலிகள் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, ஆந்திரத்தில் வேலை செய்யும், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையின் படப்பிடிப்பு இந்த நாவல். நூல் ஓட்டம் சினிமா திரைக்கதை போலவே செல்கிறது. நூலாசிரியர், தானும் ஒரு அங்கமாக இருந்த கூட்டத்தின், அவலங்களின் உண்மை பின்னணியில் படைக்கப்பட்டது. உள்ளூர் முதலாளியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பயந்து, புலம்பெயர்ந்து, வயிற்று பிழைப்புக்காக வேற்று முதலாளியிடம் அடிமையாகி, காலமெல்லாம் உழல்கிறது அப்பாவி தொழிலாளர் வர்க்கம். […]

Read more

நவீன ஜோதிட போதினி

நவீன ஜோதிட போதினி, சோ. சந்திரசேகரன், மதி நிலையம், பக். 304, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-370-2.html அனேகமாக எல்லாருக்குமே தம் எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. அதிலும் தின பலன், மாத பலன், ஆண்டு பலன், குரு, சனி கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் என்று பலவிதங்களில் தங்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களை அறிந்துகொள்வதில் விருப்பம் இல்லாதோர் மிக மிகக் குறைவு. நம் ராசியின் பலன்களைத் தெரிந்து கொள்ள ஜோதிடர்களைத்தான் அணுக வேண்டியிருக்கிறது. அப்படி […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நீண்ட நெடிய காவியங்களைப் படித்தவர்களுக்கு, அவரது மோகினித் துவு என்ற குறுநாவல் புதுவித அனுபவத்தைத் தரும். பர்மாவிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் ஒரு கப்பல் பயணியின் அனுபவத்திலிருந்து கதையை ஆரம்பிப்பதே புதுவிதமாக உள்ளது. கற்பனை நாவல் என்றாலும் கதை மாந்தர் பற்றிய வர்ணனைகள், நாவலில் வரும் திருப்பங்கள், கதையை சுவாரஸ்யப்படுத்த அவர் கையாளும் மன்னர்கள் […]

Read more

ஆழி பெரிது

ஆழி பெரிது, அரவிந்தன் நீலகண்டன், மதி நிலையம், சென்னை, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-2.html சோமபானம் என்பது எந்தவகை பானம்? சிந்துவெளி நாகரிகம், வேத காலம் துவங்கி இன்று வரை இடையுறாத பண்பாட்டு தொடர்ச்சி கொண்டவை, இந்து மதமும் இந்து கலாச்சாரமும். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ஆழி பெரிது என்ற நூல் இந்து பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும் வரலாற்றுப் புதிர்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும், அறிவு பூர்வமாகவும் அதேநேரம், மிக சுவாரசியமாகவும் முன்வைக்கிறது. தமிழ் பேப்பர் […]

Read more

இணையத்தால் இணைவோம்

இணையத்தால் இணைவோம், சைபர் சிம்மன், மதி நிலையம், கோபாலபுரம், சென்னை 86, விலை 190ரூ. ஏராளமான இணையதளங்கள் மலிந்துவிட்ட சைபர் யுகத்தில் பயனுள்ள தளங்களை வாசகர்களுக்கு அடையாளப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இணையத்தை எப்படி நம் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என எளிமையான விதத்தில் வழிகாட்டுகிறது இந்நூல். நன்றி: இந்தியாடுடே, 2/4/2014.   —- பக்தி இலக்கியங்கள் ஒரு பன்முகப்பார்வை தேசியக் கருத்தரங்கம், பா. நடராசன், கி.ர. விஜயகுமாரி, ப.முருகன், சி. சதானந்தன், தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்த்ன்தாஸ், வைஷ்ணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை 106, […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ. வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் […]

Read more

உயிரே உனக்காக

உயிரே உனக்காக, எ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண். 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17, பக்கம் 432, விலை 250 ரூ.   புதினங்கள், கட்டுரை எழுதுவதில் தனக்கென புதிய பாணியைப் படைத்து வாசகர் நெஞ்சில் இடம் பெற்றவர் நூல் ஆசிரியர். தினமலர் வாரமலரில் ஓராண்டுக்கும் மேலாக வெளிவந்த இந்தக் கதைக் கரு பலரது மனதை ஈர்த்திருக்கிறது. ஆசிரியர் நட்பு வட்டாரம் அளப்பரியது. ஆழமான மனவியல் உணர்வுகளை இதில் வரும் பாத்திரப்படைப்புகளில் எளிய தமிழில் புரிய வைத்திருக்கிறார். […]

Read more