மோகினித் தீவு
மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நீண்ட நெடிய காவியங்களைப் படித்தவர்களுக்கு, அவரது மோகினித் துவு என்ற குறுநாவல் புதுவித அனுபவத்தைத் தரும். பர்மாவிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் ஒரு கப்பல் பயணியின் அனுபவத்திலிருந்து கதையை ஆரம்பிப்பதே புதுவிதமாக உள்ளது. கற்பனை நாவல் என்றாலும் கதை மாந்தர் பற்றிய வர்ணனைகள், நாவலில் வரும் திருப்பங்கள், கதையை சுவாரஸ்யப்படுத்த அவர் கையாளும் மன்னர்கள் காலத்து நடைமுறைகள் நாவலைத் தொடர்ந்து படிக்கத் தூண்டுகின்றன. நன்றி: குமுதம், 18/6/2014.
—-
குழந்தைகளல்ல குழந்தைகள், மு. முருகேஷ், மதி நிலையம், சென்னை, பக். 151, விலை 100ரூ.
குழந்தைகள் உலகிற்குள் எளிதாக நுழைவதற்கு இந்நூல் உங்களுக்கு உதவக்கூடும். சின்னஞ்சிறு கட்டுரைகள் மூலம் குழந்தைகள் பற்றிய பல விஷயங்களை உள்ளடக்கிக் காட்டுகிறார் ஆசிரியர். குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தருவது என்பதுபோய், குழந்தைகள் நமக்கு என்னென்ன கற்றுத்தருகிறார்கள் என்பதைத் தெளிவாகவே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். ‘தோல்விகளை ருசிப்பது எப்படி? சாதனைகள், முயற்சிகள், பாராட்டுகள், கண்டிப்புகள், கண்டுபிடிப்புகள் என்று குழந்தைகளுக்குள் பல தன்னம்பிக்கை விதைகளை விதைத்துப் போகிறார். குழந்தைகள் மொழியில் இல்லாமல் குழந்தைகளுக்கான மொழியில் பெரியவர்களும் படித்துப் பயன்பெற ஏற்ற நூல். நன்றி: குமுதம், 18/6/2014.