சிகரம் பேசுகிறது

சிகரம் பேசுகிறது, வி.கிருஷ்ணமூர்த்தி, தங்கத்தாமரை பதிப்பகம், பக்.424, விலை ரூ.300. கும்பகோணம் அருகிலுள்ள கருவேலி என்னும் கிராமத்தில் பிறந்த நூலாசிரியர், தனது 11 ஆவது வயதில் தாயை இழந்தார். சென்னையில் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்று தந்தை சென்றுவிட, தனது மூத்த சகோதரர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், பட்டப் படிப்பு படிக்க வசதியில்லாததால், எலெக்ட்ரிகல் என்ஜினிரிங் பட்டயப்படிப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் அவரே பின்னாளில் பிஎச்இஎல், மாருதி, ஸெயில் என்னும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆகிய நிறுவனங்களில் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். “உற்பத்தித்துறையில் […]

Read more

பூமித்தாய்

பூமித்தாய், தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. சிறந்த கார்ட்டூனிஸ்ட், சிறந்த எழுத்தாளர் என்று புகழ் பெற்றுள்ள மதன் எழுதிய சிறந்த நூல் இது. பூமியைப் பற்றிய உண்மைகளை மனிதன் அறிந்துகொள்ளாமல் இருந்த காலக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நகைச்சுவை ததும்ப எடுத்துக்கூறுகிறார். பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்தில், இல்லை இல்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று புரூனோ என்ற இத்தாலிய நாட்டு அறிஞர் சொன்னார். உண்மையைச் சொன்னதற்காக அவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை. அவரை உயிரோடு தீயில் எரித்துக் […]

Read more

யட்சன்

யட்சன், சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இரு இளைஞர்கள். அவர்கள் கனவுகள் வேறு, இலக்குகள் வேறு. ஒருவன் சாதுவானவன். குடும்பம் உள்ளவன். இன்னொருவன் முரட்டுத்தனமானவன். தனிமை விரும்பி அவர்கள் இருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காக புறப்படும்போது வாகனங்கள் மாறிவிட்டால்? அது அவர்களது கனவுகளை, இலக்குகளை, வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்னவாகும் என்பதை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் யட்சன். எழுத்தாளர்கள் சுபா எழுதிய இந்தக் கதை திரைப்படமானது. மூலக்கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் யட்சன் திரைப்பட ஸ்டில்கள் வண்ணப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 124, விலை 45ரூ. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், வெளிவந்திருக்கும் இந்த நூல் கவனம் பெறுகிறது. இந்த நூலில், மாணவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகங்கள், கேள்விகள் என்னென்ன என்பதையும், அதற்கான தெளிவான பதில்களையும், ஆசிரியர் கூறியுள்ளார். பதில்கள், ஓர் ஆசிரியர் கூறுவது போல் அல்லாமல், ஓர் அண்ணன் தன் தம்பி, தங்கைகளுக்கு சொல்வதுபோல அளிக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் பரீட்சை எழுதுவது எப்படி, எப்படி படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம், […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நீண்ட நெடிய காவியங்களைப் படித்தவர்களுக்கு, அவரது மோகினித் துவு என்ற குறுநாவல் புதுவித அனுபவத்தைத் தரும். பர்மாவிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் ஒரு கப்பல் பயணியின் அனுபவத்திலிருந்து கதையை ஆரம்பிப்பதே புதுவிதமாக உள்ளது. கற்பனை நாவல் என்றாலும் கதை மாந்தர் பற்றிய வர்ணனைகள், நாவலில் வரும் திருப்பங்கள், கதையை சுவாரஸ்யப்படுத்த அவர் கையாளும் மன்னர்கள் […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. எழுத்துல பிதாமகர் அமரர் கல்கி எழுதிய குறுநாவல் மோகினித் தீவு. கல்கியின் தனித்துவமான நடையழகில், மனித வாழ்வின் ஆதார உணர்வுகளான நகைச்சுவை, வீரம், மர்மம், திகில், காதல் ஆகியவை கொண்டு மிளிரும் என்ற நமது அறியாமை கலந்த எண்ணத்தை அவரின் மோகினித் தீவு குறுநாவல் தகர்த்து எறிகிறது. ஒரு தியேட்டர் படம் பார்க்கப்போன இரண்டு பால்ய நண்பர்கள், நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஜப்பானிய போரின்போது […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு சென்னை 20, விலை 25ரூ. அமரர் கல்கியின் புகழ் பெற்ற குறுநாவல்களில் ஒன்று மோகினித்தீவு. அது நவீன வடிவமைப்புடன் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ஸ்யாம் வரைந்துள்ள ஓவியங்கள், நூலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/3/2014.   —- சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்களும் மருத்துவ குணங்களும், மு. அண்ணாஜோதி, சந்தனத் தென்றல், 105, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை 69, விலை 300ரூ. நமது திருக்கோவில்களின் […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.க. இளங்கோ, பாரி நிலையம், 88/184, பிராட்வே, சென்னை 108, பக். 488, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-595-2.html ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது. ஆயிரம் தலை வாங்கியில் ஒரு காட்சி, பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இடம். நீதிகேது-இன்னும் படிக்க வைக்க வேண்டும். மங்கை-கணவனுக்குக் கல்வி வேண்டும். மனைவிக்கு என்ன வேண்டும்? கணவன் மேல் அன்பு. நீதி-பெண்களுக்கு […]

Read more

நீங்களும் ஜெயிக்கலாம்

நீங்களும் ஜெயிக்கலாம், ரமணன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 120, விலை 120ரூ. நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கிறீர்கள். அதுதான் உங்கள் கனவு. லட்சியம். வாழ்க்கை. ஆனால் அதை எப்படித் தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்விக்கு விடைதான் இந்த நூல். ஒரு தொழிலைத் தொடங்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். தொடங்கிய தொழிலை எப்படி வளர்த்தெடுப்பது என்பது போன்ற வெற்றியின் ரகசியங்களை உங்களுக்கு சொல்லி ஜெயிக்க வைக்கும் முயற்சியே இந்நூல்.   —- […]

Read more