ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும், வேணு சீனிவாசன், மங்கை பதிப்பகம், பக்.368. விலை ரூ.250. ராமாநுஜருக்குப் பிறகு தோன்றிய மிகப் பிரசித்தமான விசிஷ்டாத்வைத ஆச்சார்யர் வேதாந்த தேசிகர். சம்ஸ்கிருதம் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான நூல்களை இயற்றியவர். ஸ்தோத்திரங்கள், உரைகள், வேதாந்த விளக்கம், கவிதை, நாடகம் என்று பலவாறாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிஇருக்கிறார். அதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வு நடைமுறைகளில் நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலே, ஆத்மிக விஷயங்களிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க இயலும் என்பதன் பொருட்டு, அவற்றைப் பற்றியும் இரு […]

Read more

யட்சன்

யட்சன், சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இரு இளைஞர்கள். அவர்கள் கனவுகள் வேறு, இலக்குகள் வேறு. ஒருவன் சாதுவானவன். குடும்பம் உள்ளவன். இன்னொருவன் முரட்டுத்தனமானவன். தனிமை விரும்பி அவர்கள் இருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காக புறப்படும்போது வாகனங்கள் மாறிவிட்டால்? அது அவர்களது கனவுகளை, இலக்குகளை, வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்னவாகும் என்பதை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் யட்சன். எழுத்தாளர்கள் சுபா எழுதிய இந்தக் கதை திரைப்படமானது. மூலக்கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் யட்சன் திரைப்பட ஸ்டில்கள் வண்ணப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம்

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம், முனைவர் வெ. நல்லதம்பி, மங்கை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. இன்றைய செய்தியையும், அந்றைய இலக்கியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட 60 கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்தில் காட்டப்பெற்றவை இன்று உண்மையிலேயே நடந்துள்ளன என்பதை நூலாசிரியர் ஒப்புமைபடுத்தி வெளிப்படுத்தியதை பார்க்கையில் மனதை மனங்களின் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க கால இலக்கியங்களை நவீன காலச் செய்திகளுடன் இணைத்திருக்கும் விதமும், எளிய சொற்களை பாமரர்களுக்கும் புரியும்வண்ணம் பயன்படுத்தி இந்நூலை படைத்திருக்கிறார் […]

Read more

மொழிக்கொள்கை

மொழிக்கொள்கை, இராசேந்திர சோழன், மங்கை பதிப்பகம், 700, எம்.ஐ.ஐ. இரண்டாவது தலைமைச் சாலை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை 42, விலை 180ரூ. மொழி என்று இல்லை, இனம், சாதி, மதம் உள்ளிட்டு சமகம் சார்ந்த எந்த ஒரு சிக்கலுமே தமிழக மக்களுக்கு அறிவுபூர்வமாக ஊட்டப்படாமல், அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தாமல் எல்லாம் தேர்தல், அரசியல்வாதிகளின் தன்னல நோக்கத்துக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளும் உணர்வு மட்டத்திலேயே இவை வைக்கப்பட்டு இருப்பதே எல்லாவற்றுக்கும்  காரணம் என்ற முன்னுரையுடன் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதி இருக்கும் […]

Read more

குமுதம் புத்தக அறிமுகங்கள் – 29.08.2012

வீடு நெடும் தூரம் ரவி பக்கங்கள் 240 விலை 160ரூ பரிசல் பதிப்பகம் அகிம்சை வழியில் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருமாறிய காலத்தைப் பற்றிய, ஒரு முன்னாள் போராளியின் அனுபவப் பகிர்வு இந்தப் புத்தகம். 1972-1986 வரை பதினைந்து வருட காலம் ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அப்படியே பதிவு செய்துள்ளார். ஏன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்? ஏன் இலங்கைத் தமிழர்கள், ‘எங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது’ என்று சொல்கிறார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் […]

Read more