1084ன் அம்மா

1084ன் அம்மா, மகாஸ்வேதா தேவி, பரிசல், பக். 130, விலை 130ரூ. வங்க மொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய ‘மாதர் ஆப் 1084’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு. கிருஷ்ணமூர்த்தி. பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கவுரவங்களும் கொண்ட மேல்தட்டு குடும்ப தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வறட்டுக் கவுரங்களையும் வெறுத்து, கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என, இருவருக்கிடையிலான உறவையும், பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கனபரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல். […]

Read more

சந்நியாசமும் தீண்டாமையும்

சந்நியாசமும் தீண்டாமையும், ராமாநுஜம், பரிசல், பக்.225, விலை 200ரூ. விரிவான ஆய்வையும், அதனூடாக பல்வேறு விவாதங்களையும் கோரி, நிற்க கூடிய அளவிற்கு ஆழமானது சாதி எனும் சொல்லாடல். நிலை கொண்டிருக்கும் சாதியத்தின் ஒடுக்குமுறைகள் பற்றி சமூக அறிவியலாகவும், அரசியலாகவும் விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் இயங்கி வருவதை போன்று சாதியம் பற்றி தமிழில் கோட்பாட்டு ரீதியான பார்வை சட்டகத்தை அறிமுகப்படுத்தி விவாதிக்க முனைகிறது இந்நூல். அம்பேத்கர் போன்று சாதியை, கோட்பாட்டு ரீதியாக சிந்தித்திராத நம் சூழலில் சாதியம் பற்றி முற்றிலும் வேறொரு வாசிப்பிலிருந்து […]

Read more

குமுதம் புத்தக அறிமுகங்கள் – 29.08.2012

வீடு நெடும் தூரம் ரவி பக்கங்கள் 240 விலை 160ரூ பரிசல் பதிப்பகம் அகிம்சை வழியில் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருமாறிய காலத்தைப் பற்றிய, ஒரு முன்னாள் போராளியின் அனுபவப் பகிர்வு இந்தப் புத்தகம். 1972-1986 வரை பதினைந்து வருட காலம் ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அப்படியே பதிவு செய்துள்ளார். ஏன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்? ஏன் இலங்கைத் தமிழர்கள், ‘எங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது’ என்று சொல்கிறார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் […]

Read more