1084ன் அம்மா
1084ன் அம்மா, மகாஸ்வேதா தேவி, பரிசல், பக். 130, விலை 130ரூ.
வங்க மொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய ‘மாதர் ஆப் 1084’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு. கிருஷ்ணமூர்த்தி.
பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கவுரவங்களும் கொண்ட மேல்தட்டு குடும்ப தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வறட்டுக் கவுரங்களையும் வெறுத்து, கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என, இருவருக்கிடையிலான உறவையும், பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கனபரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல்.
ஆங்கிலம், இந்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி, கன்னட, தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வங்கத்தில் 12 பதிப்புகளாக வந்துள்ள இந்நாவல், இந்தியில் பிரபல இயக்குனர் கோவிந்த நிகலானியின் இதயத்தில் ‘ஹஜார் கௌராஸிகீமா’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர், 19/1/2017.