தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல்,முனைவர் வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மிகப் பழங்காந்தொட்தே தமிழ் வாழ்வில் தகவல் தொடர்புகள் எவ்விதமெல்லாம் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது இந்த நூல். தகவலியல் என்னும் கண்ணோட்டத்தில் இத்தனை செய்திகள் நம் பரந்த பன்னெடுங்கால இலக்கிய நூல்களில் பொதிந்திருப்பது வியப்பு என்றால், அதை அழகுபட ஒரு முத்துமாலைப்போல் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் ஆற்றல் அதனினும் வியப்பு. சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, அகநானூறு, முருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, தொல்காப்பியம் ஆகிய நூல்களில் […]

Read more

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம்

இன்றைய செய்தி அன்றைய இலக்கியம், முனைவர் வெ. நல்லதம்பி, மங்கை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. இன்றைய செய்தியையும், அந்றைய இலக்கியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட 60 கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்தில் காட்டப்பெற்றவை இன்று உண்மையிலேயே நடந்துள்ளன என்பதை நூலாசிரியர் ஒப்புமைபடுத்தி வெளிப்படுத்தியதை பார்க்கையில் மனதை மனங்களின் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க கால இலக்கியங்களை நவீன காலச் செய்திகளுடன் இணைத்திருக்கும் விதமும், எளிய சொற்களை பாமரர்களுக்கும் புரியும்வண்ணம் பயன்படுத்தி இந்நூலை படைத்திருக்கிறார் […]

Read more