இன்றைய செய்தி அன்றைய இலக்கியம்
இன்றைய செய்தி அன்றைய இலக்கியம், முனைவர் வெ. நல்லதம்பி, மங்கை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
இன்றைய செய்தியையும், அந்றைய இலக்கியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட 60 கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்தில் காட்டப்பெற்றவை இன்று உண்மையிலேயே நடந்துள்ளன என்பதை நூலாசிரியர் ஒப்புமைபடுத்தி வெளிப்படுத்தியதை பார்க்கையில் மனதை மனங்களின் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க கால இலக்கியங்களை நவீன காலச் செய்திகளுடன் இணைத்திருக்கும் விதமும், எளிய சொற்களை பாமரர்களுக்கும் புரியும்வண்ணம் பயன்படுத்தி இந்நூலை படைத்திருக்கிறார் -முனைவர் வெ. நல்லதம்பி. நன்றி: தினத்தந்தி, 17/9/2014.
—-
துரும்பு, எம். அபுல்கலாம் ஆசாத், யூனிக் பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 70ரூ.
ஒரு தனிமனிதன் தன் கடமையையும், பொறுப்பையும் உணராதவரை நாட்டின் வளர்ச்சி வீதம் குறைவாகத்தான் இருக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.