யட்சன்

யட்சன், சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.

இரு இளைஞர்கள். அவர்கள் கனவுகள் வேறு, இலக்குகள் வேறு. ஒருவன் சாதுவானவன். குடும்பம் உள்ளவன். இன்னொருவன் முரட்டுத்தனமானவன். தனிமை விரும்பி அவர்கள் இருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காக புறப்படும்போது வாகனங்கள் மாறிவிட்டால்? அது அவர்களது கனவுகளை, இலக்குகளை, வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்னவாகும் என்பதை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் யட்சன். எழுத்தாளர்கள் சுபா எழுதிய இந்தக் கதை திரைப்படமானது. மூலக்கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் யட்சன் திரைப்பட ஸ்டில்கள் வண்ணப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஓவியர் ஸ்யாமின் ஓவியங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.  

—-

சீவக சிந்தாமணி, மங்கை பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

பழந்தமிழ் இலக்கியமான சீவகசிந்தாமணியை நாடக வடிவில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் சென்னை தூர்தர்ஷனின் முன்னாள் துணை டைரக்டர் டாக்டர் வி. நல்லதம்பி. இது ஏற்கனவே தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நூலாக வெளிவந்தது. மேடை ஏறவும் செய்தது. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *