நதிகள் இணைப்பு சாத்தியமா
நதிகள் இணைப்பு சாத்தியமா, குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 112, விலை 70ரூ.
உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நதிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம் (பக். 68) என, ராகுலும், நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம் (பக். 70) என மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதேநேரம் ஆந்திராவுக்கு தண்ணீர் தர ஒடிசாவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளாவும் விரும்பவில்லை. பீஹாரும், மேற்கு வங்கமும் கங்கை நீரை திசை திருப்ப விரும்பவில்லை (பக். 108) என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். சீனாவில் 1776 கி.மீ., தூரத்திற்கு நதிகள் இணைக்கப்பட்டு, அந்த கால்வாயில், கப்பல் போக்குவரத்தும் நடக்கிறது. அதைப் போன்று நம்மாலும் செய்ய இயலும். ஆனால், மத்திய அரசு முயலுமா என்று வினவியுள்ளார். குறைந்த பட்சம் தமிழக ஆறுகளை இணைத்தாலாவது, நல்ல தீர்வு கிடைக்கும் (பக். 35) என்ற அவரது நம்பிக்கை நிறைவேற, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்ப வேண்டும். இது காலத்தின் கட்டாயம். -பின்னலூரான். நன்றி: தினமலர், 1/11/2015.