சங்கு தியானம்
சங்கு தியானம், யோகி சிவானந்த பரமஹம்சர், விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், கிருஷ்ணகிரி, விலை 150ரூ.
சங்குகளின் மகத்தான சக்தியை இந்நூல் விவரிக்கிறது. வலம்புரி சங்கு எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த இல்லத்தில் செல்வம் பெருகும். எல்லா தேவதைகளும் அங்கு வாசம் செய்வார்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அரியவகை சங்குகளின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.
—-
சர்க்கரை (நீரழிவு) மீது அக்கறையா?, எஸ். காளிராஜ், சரணம் அறக்கட்டளை வெளியீடு, விலை 35ரூ.
சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை இன்றி வாழ்வதற்கான தகவல்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.
—-
கோள்சார பலன்கள், ஜோதிடர் வி.ஆர்.கே. ரவிராஜ், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ.
ஜோதிடர்கள் கோள்சார பலன்களை கூறுவதற்காக 6 வடமொழி நூல்களை ஆதாரமாகக் கொண்டு 38 தலைப்புகளில் எழுதப்பட்ட பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.