யட்சன்

யட்சன், சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இரு இளைஞர்கள். அவர்கள் கனவுகள் வேறு, இலக்குகள் வேறு. ஒருவன் சாதுவானவன். குடும்பம் உள்ளவன். இன்னொருவன் முரட்டுத்தனமானவன். தனிமை விரும்பி அவர்கள் இருவரும் குறிப்பிட்ட பணிகளுக்காக புறப்படும்போது வாகனங்கள் மாறிவிட்டால்? அது அவர்களது கனவுகளை, இலக்குகளை, வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்னவாகும் என்பதை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் யட்சன். எழுத்தாளர்கள் சுபா எழுதிய இந்தக் கதை திரைப்படமானது. மூலக்கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் யட்சன் திரைப்பட ஸ்டில்கள் வண்ணப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு

சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு, முனைவர் ம. ராஜாத்தி செல்வக்கனி, கொ. ஹேமா ஜோயல், தமிழ்த்துறை, ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி, பக். 112, விலை 230ரூ. ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர்போலும்.(உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்) தமிழ்க் காப்பியங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுள் சீவக சிந்தாமணி பெற்றுள்ள சிறப்புக்களை புலப்படுத்துவதே நூலின் நோக்கம். சீவகன் வாழ்வியல் எனும்தலைப்பில் சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம் எழுதப்பட்டுள்ளது. கட்டியங்காரனின் சதி பற்றி விளக்கமாக எழுதி, அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர் ஆசிரியர்கள். […]

Read more