தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (ஆய்வுக் கட்டுரைகள், இரு தொகுதிகள்), தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்,  தமிழ்த்துறை, முதல் தொகுதி-பக்.520; ரூ.500; இரண்டாவது தொகுதி- பக்.496; ரூ.500. சென்னையில் இரு நாள்கள் நடந்த அனைத்துலக தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட 140 ஆய்வுக் கட்டுரைகள் (தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட) இவ்விரு தொகுதிகளிலும் உள்ளன. இறைவன், அரசன், வள்ளல் முதலிய யாரேனும் ஒருவரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கையில் சுருங்கியதாக அமைவது; அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப்பற்றியதாகவும்; அறம், பொருள், […]

Read more

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு, கு.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி,பக்.496, விலை ரூ.150. சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டில் (மார்ச், 8-11) வெளியிடப்பட்ட நூல் இது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் காதல், வீரம், மக்கள் வாழ்வியல், நெறிமுறைகள், தொழில், வாணிகம், கலை முதலியவற்றை எடுத்துரைக்கின்றன. என்றாலும், அவற்றினூடே இறைவன் பற்றியும், இறை இயல்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. பிறவா யாக்கைப் பெரியோன்; (சிலம்பு),கறைமிடற்று அண்ணல் (புறம்), ஆதிரை முதல்வன்(பரிபாடல்), மழுவோன் நெடியோன் தலைவனாக(மதுரைக் காஞ்சி), "மறைமுது முதல்வன் (சிலம்பு), பிறங்கு […]

Read more

சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு

சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு, முனைவர் ம. ராஜாத்தி செல்வக்கனி, கொ. ஹேமா ஜோயல், தமிழ்த்துறை, ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி, பக். 112, விலை 230ரூ. ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர்போலும்.(உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்) தமிழ்க் காப்பியங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுள் சீவக சிந்தாமணி பெற்றுள்ள சிறப்புக்களை புலப்படுத்துவதே நூலின் நோக்கம். சீவகன் வாழ்வியல் எனும்தலைப்பில் சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம் எழுதப்பட்டுள்ளது. கட்டியங்காரனின் சதி பற்றி விளக்கமாக எழுதி, அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர் ஆசிரியர்கள். […]

Read more