மோகினித் தீவு
மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ.
எழுத்துல பிதாமகர் அமரர் கல்கி எழுதிய குறுநாவல் மோகினித் தீவு. கல்கியின் தனித்துவமான நடையழகில், மனித வாழ்வின் ஆதார உணர்வுகளான நகைச்சுவை, வீரம், மர்மம், திகில், காதல் ஆகியவை கொண்டு மிளிரும் என்ற நமது அறியாமை கலந்த எண்ணத்தை அவரின் மோகினித் தீவு குறுநாவல் தகர்த்து எறிகிறது. ஒரு தியேட்டர் படம் பார்க்கப்போன இரண்டு பால்ய நண்பர்கள், நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஜப்பானிய போரின்போது பர்மாவில் இருந்து கப்பலில் தப்பி இந்தியா வந்தவர். ரங்கூனில் இருந்து புறப்பட்ட கப்பல் பயணம் திசை மாறி மோகினித்தீவுக்கு செல்கிறது. அதன்பிறகு என்ன? என்பதை, நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக, பழம்பெரும் நாவல்கள், படைப்புகள் இளைய தலைமுறையினரை ஈர்ப்பது கடினம். ஆனால் பேஸ்புக், ட்வீட்டர் இளசுகளையும் ஈர்க்கும் வகையில் மோகினித்தீவு கதை ஓட்டம் செல்கிறது. கதையின் தன்மையும், கதைமாந்தர்களைப் பற்றிய வர்ணனைகளும், கதையின் சுவாரசிய போக்கும், நாவலில் கல்கி கையாளும் திருப்பங்களும் வாசகர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இன்றைய கணினி யுகத்தில், கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு வரிசையில் மோகினித்தீவும் ஒரு வரப்பிரசாதம். -சேது. நன்றி: தினமலர்(திருச்சி), 9/4/2014.