யுகப் புரட்சி
யுகப் புரட்சி, அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக்.232, விலை ரூ.140. அமரர் கல்கி 1931 -39 காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாராஷ்டிர மாநிலம் பெயிஸ்பூர் கிராமத்தில் 1937 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டைப் பற்றிய கட்டுரை, அம்மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாநாட்டுக்குச் சென்றவர்கள் தங்கிய இடம், குளிக்க செய்திருந்த ஏற்பாடுகள், மின்சாரம் இல்லாத அந்த ஊரில் இரவு நேரத்தில் எரியவிடப்பட்ட விளக்குகள், அளிக்கப்பட்ட உணவு என அனைத்தையும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறது. […]
Read more