பண்டித ஜவஹர்லால் நேரு
பண்டித ஜவஹர்லால் நேரு, செ. சசிகலா தேவி, வின்வின் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 50ரூ.
முதல் பிரதமரான நேருஜியின் வாழ்க்கை வரலாற்றை, சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல். நேருஜியின் இளமைப் பருவம், முதல் மேடைப்பேச்சு, முதல் சிறைத்தண்டனை, சுதந்திரப் போராட்டப் பங்களிப்புகள், பிரதமராக இருந்தபோது நாட்டு முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட சேவைகளை சிறு சிறு சம்பவங்களாக எழுதியிருப்பதோடு, பல அரிய தகவல்களையும் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. நூலின் முக்கிய நிகழ்வுகள் பகுதியில் இருந்து ஒரு துளி, ஒரு முறை, கர்நாடகாவில் நேருஜி காரில் சென்று கொண்டிருந்த வேளையில், போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் வேகமாக வந்த ஒரு லாரி, ஒரு சிறுவன் மீது மோதியது. காரை நிறுத்தி நேரு வேகமாக நெருங்கியதும், மக்கள் அவரைச் சூழ்ந்து நேருக்கு ஜே என்று கோஷமிட ஆரம்பித்தனர். கோபத்துடன் நடந்த நேரு, லாரியில் அடிபட்ட சிறுவனைத் தூக்கி, தனது காரில் படுக்க வைத்தார். பிறகு ஒரு சிறுவன் அடிபட்டு கிடக்கிறான். அவனைக் காப்பாற்ற முயற்சிக்காமல், எனக்கு ஜே போடுகிறீர்களோ? வெட்கமாக இல்லையா? என்று கண்டித்துவிட்டு காரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். -அருண். நன்றி: தினமலர், 9/4/2014.