நீங்களும் ஜெயிக்கலாம்
நீங்களும் ஜெயிக்கலாம், ரமணன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 120, விலை 120ரூ.
நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கிறீர்கள். அதுதான் உங்கள் கனவு. லட்சியம். வாழ்க்கை. ஆனால் அதை எப்படித் தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்விக்கு விடைதான் இந்த நூல். ஒரு தொழிலைத் தொடங்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். தொடங்கிய தொழிலை எப்படி வளர்த்தெடுப்பது என்பது போன்ற வெற்றியின் ரகசியங்களை உங்களுக்கு சொல்லி ஜெயிக்க வைக்கும் முயற்சியே இந்நூல்.
—-
கிருஷ்ணரின் ஆனந்த லீலை, ஸ்ரீ வைஜயந்தி, தங்கத்தாமரை பதிப்பகம், கஸ்தூரி நகர், அடையாறு, சென்னை 20, பக். 80, விலை 40ரூ.
கீதோபதேசம், ராசலீலை என்பவைதான் கிருஷ்ண அவதாரத்தில் மிக முக்கியமானவை. அவற்றில் தத்துவங்கள் நிறைந்த கீதோபதேசங்கள் தகுதிமிக்க குரு ஒருவரால் விளக்கப்பட்டாலே பாமரர்கள் புரிந்து கொள்ள முடியும். அதன்படி நடந்து கொள்ள முடியும். ஆனால் ராசலீலை தனி ஒரு மனிதன் எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடியது. ஜனரஞ்சகமாக விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அதைத்தான் இந்நூல் நமக்கு விளக்குகிறது. கிருஷ்ணன் பங்கேற்ற ராசலீலை நிகழ்வையும் அதன் உள்ளார்ந்த தத்துவங்களையும் எளிதாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். அதனைப் புரிந்து, அதன் வழி நடக்க முற்பட்டால் நீங்களும் கிருஷ்ணர் ஆகலாம். நூல் முழுதும் பக்திரசம் ததும்பும் நடை சிறப்பு. நன்றி: குமுதம், 27/11/13.