மோகினித் தீவு
மோகினித் தீவு, தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு சென்னை 20, விலை 25ரூ.
அமரர் கல்கியின் புகழ் பெற்ற குறுநாவல்களில் ஒன்று மோகினித்தீவு. அது நவீன வடிவமைப்புடன் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ஸ்யாம் வரைந்துள்ள ஓவியங்கள், நூலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/3/2014.
—-
சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்களும் மருத்துவ குணங்களும், மு. அண்ணாஜோதி, சந்தனத் தென்றல், 105, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை 69, விலை 300ரூ.
நமது திருக்கோவில்களின் சிறப்பு, அங்குள்ள தல விருட்சங்கள். ஆனால் ஒவ்வொரு திருத்தலத்திலும் உறைந்திருக்கும் கடவுளைப் பற்றி அறிந்த அளவுக்கு வணங்கும் அளவுக்கு பக்தகோடிகள் தல விருட்சங்களை அறிந்திருப்பதில்லை, அவற்றின் பெருமையை உணர்ந்திருப்பதில்லை. இதுபோன்ற நிலையில் தமிழகத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரின் பாடல் பெற்ற சைவத் திருத்தலங்களின் தலவிருட்சங்கள், அவற்றின் சிறப்புகள், மருத்துவக் குணங்களை அரிதின் முயன்று தொகுத்திருக்கிறார் கவிஞர் மு. அண்ணாஜோதி. நூலாசிரியர் ஒரு சித்த மருத்துவர் என்பதால் தல விருட்சங்களின் மருத்துவ தன்மைகளை நன்கு அறிந்து விளக்க முடிந்திருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 19/3/2014.