நடக்கட்டும் நாக்கு வியாபாரம்
நடக்கட்டும் நாக்கு வியாபாரம், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 304, விலை 135ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-1.html ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ்நாட்டில் அரசியல் கொந்தளிப்பான சூழல்களில் வெளியானவை. இன்றும்கூட அந்தத் தணல் அப்படியே கட்டுரைகளில் இருக்கிறது. திரைத்துறை சார்ந்த கட்டுரைகள் இரண்டு இருந்தபோதிலும் கட்டுரைகளின் உள்ளடக்கத்தை வைத்து இரண்டு பகுதிகளாகப் பிரித்துவிடலாம். ஒன்று ஜெயலலிதா, கருணாநிதி தொடர்பான கட்டுரைகள். இரண்டாவது இலங்கைப் பிரச்னை தொடர்பானவை. இதில் மேலதிகமான கட்டுரைகள் இலங்கைப் பிரச்னை சார்ந்தவை. எளிய நடையில் அங்கதச் சுவையுடனும் கொதிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகளில் அண்ணா மற்றும் கருணாநிதியின் தனிச்செயலர் சண்முகநாதன் குறித்த கட்டுரைகள் மாறுபட்டவை. மிக மோசமான அரசியல் சூழலை மாற்றுவதற்கு உங்களை இந்தக் கட்டுரைகள் தூண்டுமானால் இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டதன் பயன் நிறைவேறும் என்று நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார். நிச்சயமாக தமிழக அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள இது உதவும். நன்றி: தினமணி, 24/3/2014.
—-
பிரியங்களின் அந்தாதி, இவள் பாரதி, முகவரி வெளியீடு, விருகம்பாக்கம், சென்னை 92, விலை 120ரூ.
காதல், மரம், சமூகம், தனிமனித அவலம் போன்றவற்றை குறித்த வெளிப்பாடுகளை இவள் பாரதியிக் இக்கவிதை தொகுப்பில் காண முடிகிறது. வாழ்க்கையின் பல சுவாரஸ்யமான தருணங்களை தவறவிடாமல் பதிவு செய்கிறது பிரியங்களின் அந்தாதி கவிதைத் தொகுப்பு. நன்றி: இந்தியாடுடே, 2/4/2014.