மறுபடியும்

மறுபடியும், கனகராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-194-6.html இன்னும் சிநேகம் இருக்கிறது தினமணி கதிர், கல்கி, தினமலர், இதயம் பேசுகிறது போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் சுமார் 20 வருடங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர் கனகராஜன் கதைகளின் தொகுப்பு இந்த மறுபடியும். விளிம்பு நிலை அல்லது அதைக் கொஞ்சம் தாண்டிய சராசரி மனிதர்களின் துயரங்களே இந்தக் கதைகள். பால்ய கனவுகளை இழந்து டீக்கடை கிளாஸ்களை கழுவும் சிறுவர்கள், பணத்துக்காக சொத்துக்காக சொந்த அம்மாக்களை புறந்தள்ளும் மகன்கள், […]

Read more

பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ. சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை […]

Read more

நடக்கட்டும் நாக்கு வியாபாரம்

நடக்கட்டும் நாக்கு வியாபாரம், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 304, விலை 135ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-1.html ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ்நாட்டில் அரசியல் கொந்தளிப்பான சூழல்களில் வெளியானவை. இன்றும்கூட அந்தத் தணல் அப்படியே கட்டுரைகளில் இருக்கிறது. திரைத்துறை சார்ந்த கட்டுரைகள் இரண்டு இருந்தபோதிலும் கட்டுரைகளின் உள்ளடக்கத்தை வைத்து இரண்டு பகுதிகளாகப் பிரித்துவிடலாம். ஒன்று ஜெயலலிதா, கருணாநிதி தொடர்பான கட்டுரைகள். இரண்டாவது இலங்கைப் பிரச்னை தொடர்பானவை. இதில் […]

Read more

செம்புலச் சுவடுகள்

செம்புலச் சுவடுகள், (ஓர் உரைக்கவிதை தொகுப்பு), கி. தனவேல், இ.ஆ.ப. கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, விலை 50ரூ. கிராமத்து நிலப்பரப்பு தென்னார்க்காடு மாவட்ட கிராமங்களின் ஞாபகச் சுவடுகளை ஏக்கத்துடன் நினைவுகூரும் கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது. கி. தனவே இ.ஆ.ப. எழுதியிருக்கும் செம்புலச் சுவடுகள் கவிதைத் தொகுப்பு. நவீன கால நகர்ப்புற வாழ்க்கையில் தான் இழந்துவிட்ட கிராமத்து அடையாளங்களை ஒவ்வொரு நாளும் நகருக்குள் வாழப் பணிக்கப்பட்ட கிராமத்துவாசி நினைவு கூர்கின்றான். நினைவில் கிராமம் சுமந்து அலையும் […]

Read more