பாஸன் நாடகங்கள்

பாஸன் நாடகங்கள், தமிழில் அ, ரேவதி, காவ்யா, பக். 194, விலை 180ரூ. காதலா? கடமையா? பழமையும், பெருமையும் மிக்க செம்மொழி சமஸ்கிருதம். ஜெர்மன் மொழியில் இதன் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கிருந்து ஆங்கிலம் மூலம் உலகெங்கும் உலா வருகிறது. தமிழிலும் சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமாற்றம் பெறுகின்றன. ஆனால், தமிழை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, சமஸ்கிருதத்தை வளரவிடாமல், வரவிடாமல் தடுத்தோர், இன்றும் உள்ளனர். அதையும் மீறி சமஸ்கிருதம் – தமிழ் உறவு வளர்கிறது. இத்தகு மொழிப்பாலத்தில் மகாகவி பாஸன் நாடகங்கள் நான்கும், வெகு அழகாக தமிழில் தற்போது […]

Read more

பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ. சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை […]

Read more

வெள்ளை மொழி

வெள்ளை மொழி, அரவாணியின் தன் வரலாறு, ரேவதி, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 271, விலை 200ரூ. நாமக்கல்லில் துரை சாமியாகப் பிறந்தவர், ரேவதி என்னும் திருநங்கையாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு முன்பும் பின்பும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தன் வரலாறாகச் சொல்லிச் செல்லும் நூல். பெண் உணர்வோடு ஆணாக வளைய வரும் ஒருவருக்கு, ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், அவரை வெறுப்பதாலேயே அவர், தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க குடும்பத்தை விட்டு வெளியேறி, சமூகத்தின் பொதுவெளியில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை […]

Read more

உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்),

உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்), தொகுப்பாசிரியர், ரேவதி, அடையாளம் சங்கமா, 1205/1, கரூப்பூர் சாலை, புத்தானந்தம்-621310, பக்கங்கள் 115, விலை 65ரூ. தமிழில் திருநங்கையரைப் பற்றிய முதல் நூல் உணர்வும் உருவமும் என்ற நூலாகும். பல அரவாணிகளின் வாழ்க்கை கதைகளின் தொகுப்பான இந்நூலை எழுதியுள்ள ரேவதி ஒரு அரவாணி. ஆண் பாதி, பெண் பாதியாகக் கொண்ட அர்த்த நாரீஸ்வரரை தெய்வமாக வணங்கும் இந்நாட்டில் அரவாணிகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகின்றனர்? மகாபாரதத்தில் வரும் சிகண்டியை புரிந்து கொள்வோர் அரவாணிகளை ஏன் புரிந்து கொள்வதில்லை? ஆண் உடலைக் […]

Read more