வெள்ளை மொழி
வெள்ளை மொழி, அரவாணியின் தன் வரலாறு, ரேவதி, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 271, விலை 200ரூ. நாமக்கல்லில் துரை சாமியாகப் பிறந்தவர், ரேவதி என்னும் திருநங்கையாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு முன்பும் பின்பும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தன் வரலாறாகச் சொல்லிச் செல்லும் நூல். பெண் உணர்வோடு ஆணாக வளைய வரும் ஒருவருக்கு, ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், அவரை வெறுப்பதாலேயே அவர், தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க குடும்பத்தை விட்டு வெளியேறி, சமூகத்தின் பொதுவெளியில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை பக்கத்துக்குப் பக்கம் பதிவு செய்திருக்கிறார் ரேவதி. திருநங்கைகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூகத்திலும் எத்தகைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது? குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது? மனித நேயமில்லாத மனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது? என்பனவற்றையெல்லாம் முகத்தில் அறைந்தாற் போல் பதிவு செய்திருக்கும் தன் வரலாறு. நன்றி: தினமணி
—-
கிரக நிலைகளும் மனிதக் குணமும், விஜயா பப்ளிகேஷன்ஸ், 12, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 80ரூ. கிரகங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்றபடிதான் மனிதர்களின் குணங்களும், இயல்புகளும் அமைகின்றன. லக்னம், ராசி இவற்றை ஆராய்ந்து, அதற்குரியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறார் தேசியூர் வி.ஜே. ராமன். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.