பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ.

சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை வெட்டக்கூடாது. நாட்டின் சட்ட திட்டங்களை மீறக்கூடாது உள்ளிட்ட பல அறிவுரைகளை சிறுவர்களுக்கும் உணர்த்துபவை. சிறுவர்கள் மட்டுமன்று, சிறுவர்களுக்கு கதைகூற விரும்பும் பெரியவர்களும் படிக்க வேண்டிய கதைகள் இவை. நன்றி: குமுதம், 27/8/2014.  

—-

கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும், இவள் பாரதி, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 110ரூ.

கன்ஸ்யூமர்கள் உஷார்ப்படுத்தும் ஒரு நல்ல முயற்சி இது. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் ஏதேனும் பிரச்னைகள் எந்த ரூபத்திலாவது உருவாகக்கூடும். ஆனால் அந்தப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது, அதை எப்படி தீர்த்துக்கொள்வது என்று தெரியாமல் பலர் தவிக்கும் நிலை. எனவே நுகர்வோர் யார்? அவர்களுக்கான உரிமைகள் என்ன? எப்படி எங்கே அதற்கான புகாரை அளிப்பது? என்பதைத் தெரிந்துகொண்டார், அந்தப் பிரச்சனைகளை எளிதில் எதிர்கொள்ளலாம். அந்தப் பணியைத்தான் இந்நூல் செய்கிறது. உரிய வல்லுநர்களின் உதவியுடன் நுகர்வோருக்கு எளிமையாக சொல்லித்தருகிறார் இவள்பாரதி. நன்றி: குமுதம், 27/8/2014.

Leave a Reply

Your email address will not be published.