மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.

பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது மோதாமல் கடைசி வினாடியில் தவிர்த்த அதிர்ச்சி சம்பவம் என புத்தகங்களில் வாழ்வியல் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கிறது. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜெயந்தி மாலாவுடன் போட்டி நடனம் ஆடிய பத்மினி, அமெரிக்காவில் வைஜெயந்தி ஆடிய பரதம் பார்த்து நெகிழ்ந்த அனுபவம் இன்னும் புதுமையானது. டைரக்டர் கே. சங்கர், கவிஞர் வாலி, பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் பற்றிய தகவல்களும் ஆச்சரியங்கள் சந்திக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 20/8/2014.  

—-

  கடைத்தெரு கதைகள், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. சிறந்த சிறுகதைகளைக்கொண்ட புத்தகம், சாலைக்கடையை நிலைக்களனாக வைத்து அற்புதமான குணச்சித்திரங்களை, உயிரோட்டமுள்ள சம்பவங்களை ஒன்றுபோல மற்றொன்று இல்லாமல் படைத்திருக்கிறார், நூலாசிரியர் ஆ. மாதவன். சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விரவிக் கிடக்கின்றன. இக்கதைகளை படிப்போர்க்கு புதுமையான அனுபவம் கிடைக்கும். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *