விந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு
விந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு, மு. பரமசிவம், அருள் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 120ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-3.html தமிழ்ச் சிறுகதையிலும் புதினத்திலும் நடப்பியல் வாழ்க்கையைக் கற்பனைப் பாங்கோடு படைத்தவர் விந்தன். கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம் ஆகியன அவருடைய ஆறு நாவல்கள். நாவல்களைப் பற்றிய வினாக்களுக்கும், விமர்சனங்களுக்கும் விடையும் தெளிவும் அளிக்கும் வகையில் நாவல்களை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் அறிமுகப்படுத்தி ஆய்வு செய்துள்ளார் விந்தனுடன் நெருங்கிப் பழகியவரான நூலாசிரியர். நாவல்களை ஏற்கெனவே படித்தவர்கள் அவற்றை மீண்டும் அசைபோடவும் படிக்காதவர்கள் முழு நாவலைத் தேடும் வகையிலும் நூல் அமைந்துள்ளது. கதைச்சுருக்கம், கதை மாந்தர்கள், கருத்துச் சுருக்கம் ஆகியவற்றைத் தந்து ஒவ்வொரு நாவலும் சிறப்பாக திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. பாலும் பாவையும்ந வல் விந்தனுக்குப் பலவிதமான பாராட்டுதல்களை மட்டுமின்றி பாதிப்பையும் உண்டாக்கியது. அகிலன் எழுதிய சிநேகிதி நாவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அன்பு அலறுகிறது நாவல் எழுதப்பட்டது போன்ற அதிகம் அறியப்படாத சுவாரசியமான பல்வேறு விவரங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமணி, 17/8/2014.
—-
உலக சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ், ராஜி புத்தக நிலையம், நாகப்பட்டினம், விலை 70ரூ.
மூலதனம் (கேபிடல்) என்ற புத்தகம் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ரஷிய சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். அவருடைய வாழ்க்கைக் குறிப்பும், கருத்துக்களும் கொண்ட புத்தகம். வழக்கறிஞர் சோ. சேசாலம், இதை எளிய இனிய நடையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.