செம்புலச் சுவடுகள்

செம்புலச் சுவடுகள், (ஓர் உரைக்கவிதை தொகுப்பு), கி. தனவேல், இ.ஆ.ப. கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, விலை 50ரூ. கிராமத்து நிலப்பரப்பு தென்னார்க்காடு மாவட்ட கிராமங்களின் ஞாபகச் சுவடுகளை ஏக்கத்துடன் நினைவுகூரும் கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது. கி. தனவே இ.ஆ.ப. எழுதியிருக்கும் செம்புலச் சுவடுகள் கவிதைத் தொகுப்பு. நவீன கால நகர்ப்புற வாழ்க்கையில் தான் இழந்துவிட்ட கிராமத்து அடையாளங்களை ஒவ்வொரு நாளும் நகருக்குள் வாழப் பணிக்கப்பட்ட கிராமத்துவாசி நினைவு கூர்கின்றான். நினைவில் கிராமம் சுமந்து அலையும் […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, விலை ரூ. 80. சொந்தத்தில் ஒரு வீடு என்பது பலருக்கும் கடைசிவரை நிறைவேறாத ஒரு கனவாகவே நின்றுவிடுகிறது. முறையான திட்டமிடல் இருந்தால் ஒரு நல்ல வீட்டை உருவாக்கிவிடமுடியும் என்னும் நம்பிக்கையைத் தருகிறது ‘ அகமும் புறமும்’ என்னும் இந்த நூல்! மிரட்டுகிற மின்சார வெட்டைக்கூடச் சமாளிக்கும் விதமான மாற்று வழிகளையும் விளக்குகிறார் ஆசிரியர். வீடு என்பதன் அடிப்படைத் தேவையே நல்ல வெளிச்சமும் காற்றும்தானே? வங்கிக் கடன்கள் காப்பீட்டு வசதிகள் எல்லாவற்றையும் விளக்குவது போலவே வீட்டைச் சுற்றிலும் […]

Read more

பிரபஞ்சனின் மனிதர் தேவர் நரகர்

 மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், 256 பக்கங்கள், 180 ரூ, புதிய தலைமுறை, சென்னை – 32 நாற்பத்தைந்து தலைப்புகளில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் மனிதர் தேவர் நரகர். பிறந்த ஊர், பிறப்புக்கு காரணமான அப்பா என்று தொடங்கும் இந்த நூலின் உருவாக்கத்தில் ஒரு அமைப்பு முறை இருப்பதைக் காணமுடிகிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதனை நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்னும் கட்டுரைகள் விளக்குகிறது. ஆசிரியர்கள் பற்றிய பிம்பம், கதை எழுதக் காரணமான விஷயங்கள் என்று […]

Read more