பிரபஞ்சனின் மனிதர் தேவர் நரகர்

 மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், 256 பக்கங்கள், 180 ரூ, புதிய தலைமுறை, சென்னை – 32 நாற்பத்தைந்து தலைப்புகளில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் மனிதர் தேவர் நரகர். பிறந்த ஊர், பிறப்புக்கு காரணமான அப்பா என்று தொடங்கும் இந்த நூலின் உருவாக்கத்தில் ஒரு அமைப்பு முறை இருப்பதைக் காணமுடிகிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதனை நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்னும் கட்டுரைகள் விளக்குகிறது. ஆசிரியர்கள் பற்றிய பிம்பம், கதை எழுதக் காரணமான விஷயங்கள் என்று […]

Read more

எதிர்ச்சொல்

எதிர்ச்சொல், பாரதி தம்பி, புலம், சென்னை 14, பக்கங்கள் 120, விலை 70ரூ. “உண்மையான போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு ஒரு இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. … சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும் … நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக் கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்.” மேற்கண்ட வார்த்தைகளுடன்தான் […]

Read more