கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 248, விலை 120ரூ. இன்றைய நவீன உலகம் கல்வியை, மிகப் பெரிய வியாபாரப் பொருளாக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் நூல். நான்காம் வகுப்பு மாணவனுக்கு டேப்லேட் கணினி, ப்ராஜெக்ட் செய்ய ரூ. 10 ஆயிரம் செலவு, மேஜை – நாற்காலியை உடைத்துவிடாமலிருக்க ரூ. 30 ஆயிரம் பிணையத்தொகை, அரசு கட்டணத்தை அலட்சியப்படுத்தி அதைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணம், தெருமுனை மட்டுமே வந்து செல்லும் பள்ளிப் பேருந்துக்கு ரூ.16 ஆயிரம் என […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி,  விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் […]

Read more

தவிக்குதே தவிக்குதே

தவிக்குதே தவிக்குதே, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 223, விலை 110ரூ. ஜீவராசிகளின் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீர் உலகமயச்சூழலில் வணிகமயமாகிப் போனதைக் கவலையுடனும், தீர்வுகளுடனும் முன் வைக்கும் நூல். இயற்கையின் கொடையாள தண்ணீரை வணிகமயமாக்கியதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியலை நூலாசிரியர் விளக்கியுள்ளார். நாடு முழுவதும் அரசு தனியார் கூட்டில் உருவாகும் குடிநீர்த் திட்டத்தில் கொள்ளை லாபம் அடிக்கும் பன்னாட்டு, தனியார் நிறுவனங்களின் முகத்திரையைக் கிழிக்கும் ஆசிரியர், அதற்குத் துணை போகும் மத்திய, மாநில அரசுகளையும் சாடியுள்ளார். அடிப்படைத் தேவையான குடிநீரை […]

Read more

எதிர்ச்சொல்

எதிர்ச்சொல், பாரதி தம்பி, புலம், சென்னை 14, பக்கங்கள் 120, விலை 70ரூ. “உண்மையான போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு ஒரு இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. … சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும் … நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக் கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்.” மேற்கண்ட வார்த்தைகளுடன்தான் […]

Read more