மகாபாரதம்
மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ மகான்களும் மாபாவிகளும் வலம் வரும் காவியம் மகாபாரதம். வியாசன் வடித்தது. அதனுடைய கதைச் செழுமையால் அனைத்து மொழிகளாலும் அரவணைக்கப்பட்டது. வில்லிபுத்தூரார் பாடல்களாக வடித்தார் தமிழில். வசனமாக கொண்டுவந்து தந்தார் கும்பகோணம் ராமானுசாச்சாரியார். அதிலுள்ள அறத்தை சாறு பிழிந்து கொடுத்தார் நா. பார்த்தசாரதி. கதையை நாடக பாணியில் வர்ணித்தார் பழ. கருப்பையா. இதோ, பிரபஞ்சன் தன்னுடைய கதா ரசனைப்படி மகாபாரத மனிதர்களை நம் மனக்கண் முன் கொண்டுவந்துள்ளார். உலகத்தின் முதல் தன் வரலாற்றை வியாசரே எழுதியிருக்கிறார். […]
Read more