வெற்றி தரும் நேர நிர்வாகம்
வெற்றி தரும் நேர நிர்வாகம், பராங்க் அட்கின்ஸர், தமிழாக்கம் வெ. ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ2, ஜாஷ் சேம்பர்ஸ், 7 அ சர் பிரோஷா மேத்தா சாலை, போர்ட், மும்பை 400 001, விலை 185ரூ.
இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலத்தில் வெளியான நூல் வெற்றி தரும் நேர நிர்வாகம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. காலம் பொன் போன்றது என்ற வேத வாக்கிற்கு இணங்க, இன்றைய உலகின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே நேரத்தைத் திட்டமிடுவது தற்போது இன்றியமையாதது. இ.மெயில், போன் அழைப்புகளை நிர்வகிப்பது, வழக்கத்தை விட கூடுதலாக தினசரி பணிகளை முடிப்பது சிறப்பாக பணி செய்து பணி பளுவை குறைத்தல், அலுவலகங்களில் ஏற்படும் குறுக்கீடுகளைச் சமாளிக்கவும் இந்த நூல் பல்வேறு யோசனைகளையும் உதவிகளையும் அளிக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, 5/3/2014.
—-
பட்டினத்தார் பாடல்கள் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 60ரூ.
பட்டினத்தார் பாடல்கள் இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் தெய்வீகப் பாக்கள். அவற்றுக்கு பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்த்தென்றல் திரு.வி.க. உரை எழுதினார். எளிய மக்கள் புரிந்து கொள்ள இயலாத கடின நடையில் அவ்வுரை அமைந்தது. இப்போது வாசு.இராதாகிருஷ்ணன் எல்லோரும் புரிந்துகொள்ளும்வகையில், எளிய இனிய நடையில் உரை எழுதியுள்ளார். பட்டினத்தாரின் வாழ்க்கை வரலாறும் நூலில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 5/3/2014